26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
aa64 2
Other News

அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி!! அண்ணியுடன் கள்ளக்காதல்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை ஒட்டியுள்ள சித்தேலி கிராமம் பிரியால் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (24). எனது மனைவி யாமினி (20). இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ், சித்தேலி மாந்தோப் பகுதிக்கு பின்புறம் உள்ள கிணறு அருகே இன்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார்.

அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையுண்ட விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் ஹடம்பரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

படுகொலை செய்யப்பட்ட இளைஞன் விக்னேஷ் மற்றும் அவரது தம்பியின் மருமகன் சதீஷ் (22). இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக சித்தேரி விநாயகபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது அண்ணன் உறவு முறையான விக்னேஷ் வீட்டுக்கு வந்து செல்லும்போது அண்ணி முறையான யாமினி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுநாளடைவில் கள்ளக்காதலாக மாறியது . இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி விக்னேஷுக்கு பிறந்தநாள் .

தங்களுடைய கள்ளக்காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருக்கிறார் என மனைவி யாமினியும் கள்ளக்காதலன் சதீஷ் ஆகியோர் கூட்டு சேர்ந்து விக்னேஷை தீர்த்தக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு 11 மணிக்கு விக்னேஷ் வீட்டுக்கு சதீஸ் வந்துள்ளார் . அப்போது நாளை உனக்கு பர்த்டே அண்ணா. நான் உனக்கு பார்ட்டி தருகிறேன் வா என்று அழைத்து சென்றுள்ளார்.

 

பிறகு மாந்தோப்பு பின்புறம் உள்ள கிணற்றின் அருகில் உட்கார்ந்து இருவரும் மது குடித்துள்ளனர். விக்னேஷுக்கு போதை தலைக்கு ஏறியதும் உனக்கு நான் பர்த்டே சர்ப்ரைஸ் ஒன்று தருகிறேன் என்று சொல்லி தான் வைத்திருந்த கருப்பு துணியால் கண்களை மூடிக்கொள் என கூறி துணியால் கண்களை கட்டியுள்ளார்.

அதன் பிறகு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு ஒன்றும் தெரியாது போல் விநாயகபுரத்துக்கு சென்றுள்ளார்.

 

போலீசார் இன்று காலை யாமினியிடம் விசாரித்த போது சிகரெட் பிடிக்க வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லி வந்தார்.

இதனால் போலீசாருக்கு யாமினி மீது சந்தேகம் வலுத்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் யாமினியும், கொலை செய்யப்பட்ட விக்னேஷின் தம்பி முறையான சதீசும் கள்ளக்காதலில் ஈடுபட்டதும், அந்த கள்ளக்காதலுக்கு விக்னேஷ் இடையூறாக இருந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அழைத்து சென்று விக்னேஷை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.

 

அதே நேரம் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு வந்த சதீஷ் ஒன்றும் தெரியாது போல் என்ன நடந்தது? ஏது நடந்தது என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். இதற்கிடையே நேற்றிரவே கொலை செய்யப்பட்டபோது சட்டையில் ரத்தக்கரை படிந்ததால் அந்த சட்டையை மறைவான இடத்தில் வைத்து எரித்துள்ளார்.

மேலும் தான் அணிந்திருந்த பேண்ட்டை கழற்றி பெட்டியில் மறைத்து வைத்தார். தொடர்ந்து போலீசார் யாமியுடனுன், சதீஷடனும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அசோக் செல்வன்..

nathan

சிம்மத்தில் நுழையும் புதன்…

nathan

தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

nathan

கேரளாவில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

nathan

பிராமி: brahmi in tamil for hair

nathan

பிளாஸ்டிக் பேட் வியாபாரம் செய்யும் விஜயகாந்த் தம்பி!

nathan

தெரிஞ்சிக்கங்க…சீரகம் அதிகமா சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள்லாம் வருமாம்!

nathan

இந்த ராசிக்காரங்க ரொம்ப பாவம் செஞ்சவங்களாம்…

nathan

நாயின் பிறந்த நாளை 5 லட்சம் செலவில் கொண்டாடிய பெண்!!

nathan