23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1643202
Other News

பன்னீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

தாபா மசாலாவிற்கு…

* மல்லி விதைகள் – 2 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/4 டீஸ்பூன்

* கிராம்பு – 3

* ஏலக்காய் – 2

* பட்டை – 1/2 இன்ச்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு…

* பன்னீர் – ஒரு கப்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* உப்பு – 1/4 டீஸ்பூன்

* நெய்/வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

* நெய்/வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* ஏலக்காய் – 2

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 2

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* தயிர் – 1/2 கப்

* தண்ணீர் – 1/2 கப்

* உலர்ந்த வெந்தய கீரை/கசூரி மெத்தி – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)1643202

செய்முறை:

* முதலில் ஒரு பெரிய பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீரை ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாபா மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்து இறக்கி, குளிர்ந்ததும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தாபா மசாலா பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்க வேண்டும்.

* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் உலர்ந்த வெந்தய கீரை, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா தயார்.

Related posts

தங்க மோதிரம் அணிவதால் இந்த ராசிக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் நடிகை ராதிகா சரத்குமார்

nathan

மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டிக்கொடுக்க மகளின் நகைகளை அடமானம் வைத்த காவலர்!

nathan

98 வயது மூதாட்டி தன் 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள்

nathan

இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..!

nathan

கிளாமர் குயினாக மாறிய லாஸ்லியா..

nathan

காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

nathan

சந்திரமுகி 2 கங்கனா ரனாவத் பற்றி பதிவிட்ட ஜோதிகா!

nathan

பிக் பாஸ் பவித்ராவுக்கு வீட்டில் கிடைத்த வரவேற்பு..

nathan