24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
19dQM1V
மருத்துவ குறிப்பு

மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்

புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டதும், மூலத்துக்கு மருந்தாக பயன்படுவதும், முகப்பருவை மறைய செய்வதும், ரத்த கசிவை போக்க கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதுமானது மாசிக்காய். பல்வேறு நன்மைகளை கொண்ட மாசிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மாசிக்காய் கடினமாக இருக்கும் என்பதால், அதன் பொடியை வாங்கி பயன்படுத்தலாம். மாசிக்காயை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மாசிக்காய் பொடி, சாதிக்காய் பொடி, எலுமிச்சம் பழம்.சிறிதளவு மாசிக்காய் பொடியுடன் சிறிது சாதிக்காய் பொடி, சிறிது எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை இரவு நேரத்தில் முகப்பருவின் மீது பூசவும். பின்னர், காலையில் முகம் கழுவினால் முகப்பரு மறையும். மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. தசையை இறுகச் செய்வதுடன் நோய்களை தடுக்கிறது. புற்றுநோய், அல்சர் வராமல் பாதுகாக்கிறது.

மாசிக்காயில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் மற்றும் இரும்பு சத்து, கால்சியம் சத்து, நார்ச்சத்து உள்ளது. ரத்த கசிவை போக்கிறது. புண்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை பெற்றது. மாசிக்காயை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் மாசிக்காய் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ரத்தமூலம் இருப்பவர்கள், மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். வாய் புண் தொண்டை புண் குணமாகிறது.

மாசிக்காய் பொடியை பயன்படுத்தி மூலத்துக்கான வெளிபூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாசிக்காய் பொடி, அகத்தி கீரை, விளக்கெண்ணெய். ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றவும். இதில் அகத்தி கீரையை போட்டு வதக்கவும். கீரை பொறிந்ததும் மாசிக்காய் பொடியை சேர்க்கவும். இந்த தைலத்தை வடிக்கட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதை மேல்பூச்சாக ஆசனவாயில் பயன்படுத்தும்போது, மூலம் சரியாகும். மூலத்தை சுருக்கி இயற்கை நிலைக்கு கொண்டுவரும். வெள்ளைப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மாசிக்காய் பொடி, பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். ஒரு ஸ்பூன் மாசிக்காய் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின்னர் பால் சேர்க்கவும். இதை குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். மாசிக்காயில் உன்னதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது, உள் மற்றும் வெளி மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான்களை போக்குவதுடன், நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ‘மாயபலா’ என்ற வடமொழி பெயரை கொண்ட மாசிக்காய், வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மருத்துவ பொருளாகும்.19dQM1V

Related posts

கொலஸ்ட்ரால் குறைக்க…

nathan

வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்ல, அழுதாலும் நோய்விட்டு போகும் – எப்படின்னு தெரியுமா???

nathan

பித்தப்பை கல்லை அகற்ற புதிய சிகிச்சை

nathan

உங்க குழந்தை பிறந்த அப்போ என்ன கலர்ல இருந்தாங்க?

nathan

ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?

nathan

மாணவர்களே நீங்களும் தலைவர் ஆகலாம்

nathan

மாதவிடாய் பிரச்சனைகள்… உடல் எடை அதிகரிப்பும், காரணங்களும்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை இப்படி வையுங்கள்!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

தும்மல் வர காரணங்கள்

nathan