1 pineapplerasam
Other News

சுவையான அன்னாசி ரசம்

தேவையான பொருட்கள்:

* அன்னாசி – 2 துண்டுகள்

* பெரிய தக்காளி – 1

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* வேக வைத்த துவரம் பருப்பு – 1/3 கப்

* தண்ணீர் – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 3/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 2

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை1 pineapplerasam

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் 1 துண்டு அன்னாசியைப் போட்டு அரைத்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் 1/2 தக்காளியை கையால் பிசைந்து, அதில் 3/4 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அத்துடன் அன்னாசி சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

* அதன் பின் அரைத்த மிளகு கலவையை சேர்த்து 5-7 நிமிடம் பச்சை வாசனை போக மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

Pineapple Rasam Recipe In Tamil
* அதற்குள் மீதமுள்ள ஒரு துண்டு அன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டவும். அதேப் போல் மீதமுள்ள பாதி தக்காளியையும் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் அன்னாசி துண்டுகள் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, கொதிக்கும் ரசத்தில் ஊற்றி, தேவையான அளவு நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து துவரம் பருப்பை நன்கு மென்மையாக வேக வைத்து மசித்து, ரசத்துடன் சேர்த்து ஒரு கொதி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அன்னாசி ரசம் தயார்.

Related posts

5 STAR ஹோட்டல்.. ராதா மகளுக்கு வரதட்சணை இத்தனை கோடியா..?

nathan

தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓரம் கட்டும் நடிகை பிரியா பவானி

nathan

நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் டும் டும்

nathan

யோகி பாபு மீது காவல் நிலையத்தில் மோசடி புகார்

nathan

துணிச்சலான சிங்கப்பெண்கள் இவங்கதான் போல! விலைமாதுவாக நடித்த பிரபல நடிகைகள்..

nathan

எனக்கு நீ… உனக்கு நான்! ரக்சிதா வெளியிட்ட உருக்கமான பதிவு

nathan

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அடுத்த அதிரடி – நடவடிக்கை

nathan

சனிபகவானின் ராஜயோகத்தில் பலன்

nathan

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்..

nathan