சந்திரயான் 3 லேண்டர் நாளை மாலை 5:47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே சந்திரயான் தரையிறக்கம் வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது. நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் தரையிறக்கம் உள்ளதாகவும், திட்டமிட்டபடி சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
“சந்திரன் தரையிறங்கும் பணி சுமூகமாக நடைபெற்று வருகிறது. சந்திரயான்-3-ன் செயல்திறனில் நாங்கள் திருப்தி அடைகிறோம். திட்டமிட்டபடி நாளை மாலை 6:04 மணிக்கு நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்க உள்ளது. சந்திரயான்-3 நிலவு மேற்பரப்பு. இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது. தரையிறங்கும் நிகழ்வு நாளை மாலை 5:20 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்கிறது.
#WATCH | Chandrayaan-3 Mission | ISRO tweets images of the moon captured by the Lander Position Detection Camera (LPDC) from an altitude of about 70 km, on August 19, 2023. LPDC images assist the Lander Module in determining its position (latitude and longitude) by matching them… pic.twitter.com/l7PwydPMdF
— ANI (@ANI) August 22, 2023