25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
karuppai
பெண்கள் மருத்துவம்

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்.

பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.

அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51.

மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல் தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.

சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல் வலி சிறிய கட்டிகள் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம்.

இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல் வளர்ந்து கொண்டே போதல் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல் மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.

நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும்.

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ரெசிபி

ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும் தனியா மிளகு சீரகம் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம் – பாதி தக்காளி 1 கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா சீரகம் மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.

அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள் அரைத்த பொடி வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.

பனீர் கேரட் குருமா: பனீர் அரை கப் கேரட் கால் கிலோ வெங்காயம் 4 தக்காளி 4 சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை பச்சை மிளகாய் கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு பட்டை கிராம்பு உள்ளிட்டவற்றை வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம் தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.

நூடுல்ஸ் கட்லட்: தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ் வேகவைத்த காய்கறிகள் உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.

டயட்

அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சிறுநீரகத் தொற்று சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல் தினமும் வாக்கிங் சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இனிப்பு வகைகள் ஐஸ் கிரீம் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.

கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும்.

மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள் கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வெந்தயக் கீரையுடன் பூண்டு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள் காயவைத்த கறுப்பு எள் கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.

விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.

வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.
karuppai

Related posts

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவரா? கர்ப்பம் தரிக்க முயல்கிறீர்களா?

nathan

மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்?

nathan

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் மாதவிலக்கின்போது பெண்கள், வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால் . . .

nathan

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்

nathan

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்…

nathan

நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது? விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீங்க..

sangika

டீன்ஏஜ் பெண்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika

கர்ப்பவதிகள், கர்ப்பம் தரிக்கவிருக்கும் பெண்கள் – போலிக் அமிலம் அவசியமா?

nathan