அதிகப்படியான வேலைப்பளுவினால் பலரும் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் எந்நேரம் வேண்டுமானாலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உடலில் இரத்த அழுத்தம் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது தெரியுமா?
ஆம், உயர் இரத்த அழுத்தம் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும். பொதுவாக உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியானது, உடலின் பல்வேறு பகுதிகள் பழுதடைந்த பின் தான் நன்கு வெளிப்படும். அதில் ஒன்று தான் நாள்பட்ட சிறுநீரக நோய்கள். சிலருக்கு இதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தெரியாதாம்.
இங்கு எப்படி உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தை பழுதடையச் செய்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
இரத்த நாளங்கள் பாதிப்படையும்
சாதாரணமாக இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், இதயமானது இரத்தத்தை கஷ்டப்பட்டு தமனிகள் மற்றும் சிரைகளின் வழியே தள்ளும். இப்படியே பல நாட்கள் நடந்தால், இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்து, அதனால் உடலில் உள்ள இரத்த நாளங்களும், சிறுநீரகத்தில் உள்ள சிறு இரத்த குழாய்களும் பாதிப்படையும்.
கழிவுகள் வெளியேறுவதில் இடையூறு
சிறுநீரகத்தில் உள்ள இரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டால், அதனால் கழிவுகள் மற்றும் நச்சுக்களை உடலில இருந்து பிரித்து எடுத்து வெளியேற்றுவதில் இடையூறு ஏற்படும்.
சிறுநீரக செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகத்தில் உள்ள சிறு இரத்த குழாய்கள் அழுத்தத்திற்கு உட்பட்டு, கழிவுகளை வெளியேற்ற முடியாமல், நாளடைவில் அதுவே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.
சிறுநீரக நோய்
ஓர் உலக நோய் தற்போது நாள்பட்ட சிறுநீரக நோய் உலக நோயாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், உலகில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் தான்.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம்
ஒருவருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இது சிறுநீரகத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.
உயர் இரத்த அழுத்தமும்
சிறுநீரக செயலிழப்பும் ஒவ்வொரு ஆண்டும் உயர் இரத்த அழுத்தத்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 25,000-திற்கும் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் அம்பலப்படுத்துகிறது.
போதிய சிகிச்சை அவசியம
் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள், மிகவும் கவனமாக இருப்பதோடு, சிறுநீரகத்தின் மீதுமும் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் ஆரம்பத்திலேயே உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு கண்டுபிடித்து, அதற்கு போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், ஆபத்துக்களை குறைக்கலாம்.
இரத்த அழுத்த கட்டுப்பாடு
முக்கியம் உங்கள் சிறுநீரகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதி நிலை சிறுநீரக நோய்கள், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி, அதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும் அல்லது வாழ்நாள் முழுவதும் டையாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டி வரும்.