24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
1 parotta salna 1669903193
சமையல் குறிப்புகள்

சுவையான பரோட்டா சால்னா

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* தக்காளி – 2 (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு…

* சின்ன வெங்காயம் – 5

* பச்சை மிளகாய் – 1

* இஞ்சி – 1 இன்ச்

* பூண்டு – 2 பல்

* கசகசா – 1/2 டீஸ்பூன்

* முந்திரி – 5

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* மிளகு – 1/4 டீஸ்பூன்

* ஏலக்காய் – 2

* கிராம்பு – 2

* பட்டை – 1 இன்ச்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் – 1/2 கப்

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கல்பாசி – சிறிது

* அன்னாசிப்பூ – 1

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1

* பிரியாணி இலை – 1

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் , வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

Parotta Salna Recipe In Tamil
* பிறகு அதில் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் 1 கப் நீரை ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சால்னா நீர் போன்று இருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ப நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* சால்னாவில் இருந்து பச்சை வாசனை நீங்கி எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பரோட்டா சால்னா தயார்.

குறிப்பு:

* மசாலா பொடிகளை சேர்த்த பின்னர், அவற்றை அடிப்பிடிக்க வைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் சுவையே மாறிவிடும். மசாலா பொடிகளை சேர்த்து சில நொடிகள் வதக்கியதும், அடுத்து சேர்க்க வேண்டிய பொருளை உடனே சேர்த்துவிடுங்கள்.

* இந்த பரோட்டா சால்னாவில் வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

இறால் கிரேவி

nathan

சுவையான வரகு சாமை சர்க்கரை பொங்கல்

nathan

சுவையான ரவை தேங்காய் உப்புமா

nathan

தக்காளி குழம்பு

nathan

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

nathan

பெண் பிள்ளைகளுக்கு சமையல் கற்றுக் கொடுங்கள்

nathan

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சாம்பார்

nathan

சுவையான தக்காளி பாஸ்தா

nathan

கத்திரிக்காய் மசாலா குழம்பு

nathan