தேவையான பொருட்கள்:
* பால் – 1/2 கப்
* மைதா – 1 கப் + தேவையான அளவு
* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
Butter Kulcha Recipe In Tamil
* பின் பிசைந்த மாவை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று தேய்க்க வேண்டும்.
* பின் அதன் மேல் நீரைத் தடவ வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். தவா சூடானதும், தேய்த்து வைத்துள்ள குல்ச்சாவை தவாவில் போட வேண்டும். அப்படி போடும் போது, நீர் தடவிய பக்கம் அடியில் இருக்க வேண்டும்.
* குல்ச்சா சற்று உப்பி வரும் போது, தவாவை எடுத்து, அப்படியே கவிழ்ந்து நெருப்பில் சிறிது நேரம் காட்டி, பின் தவாவை அடுப்பில் வைத்து குல்ச்சாவை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் மேலே சிறிது வெண்ணெயைத் தடவினால், சுவையான பட்டர் குல்ச்சா தயார்.