29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
girls can be sleep with bra
பெண்கள் மருத்துவம்

பெண்கள் இரவில் தூங்கும் போது பிரா அணிந்து கொள்ளலாமா.?

பெண்கள் தங்களுக்குள் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் போது தூங்கும் வேளைகளில் பிரா (உள்ளாடை) அணியலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி பேசுவது சகஜம். ஆனால், நீங்கள் இது பற்றி 10 பெண்களிடம் கேட்டால் 10 விதமான வேறு வேறு பதில்கள் கிடைக்கும். இதே கேள்வியை நிபுணர்களிடம் கேட்டால், உங்களுக்கு ஏற்ற மிகவும் வசதியான பிராவை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தூங்கும் போதும் கூட பிரா அணிந்து கொள்ளலாம் என்று பதில் தருவார்கள். சில பெண்கள் தூங்கும் போது பிரா அணிவதையும், வேறு சிலர் அவ்வாறு அணிந்து கொண்டு தூங்கினால் வரும் சுகாதார கேடுகள் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

இலேசான எடையும், கீழே ஒயர் இல்லாமலோ அல்லது கேமிசோல் பாணியிலான பைஜாமாவையோ அணிந்து கொண்டு தூங்கினால் உங்களுடைய உறக்கம் நன்றாக இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரா மிகவும் இறுக்கமாகவோ, தடிப்பாகவோ இருக்கக் கூடாது. எனினும், தூங்கும் போது பிரா அணியலாமா, வேண்டாமா என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், தவறான சைஸ் பிராவை தேர்ந்தெடுத்தால் அதற்கேற்ற மோசமான பலனை அனுபவிக்க நேரிடும். கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும் பிராவை அணிந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். எப்படியாயினும், தூங்கும் போது இறுக்கமான மற்றும் வசதியற்ற பிராவை அணிவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.

கீழ்பகுதியில் ஒயர் கொண்ட இறுக்கமான பிராவை தூங்கும் போது அணிபவராக இருந்தால், அந்த வகை பிராவினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் பற்றி இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரத்த ஓட்டம் குறைதல் இறுக்கமான பிரா அணிபவர்களின் இரத்த ஓட்டம் தடையற்ற வகையில் ஓடுவது தடைபடும். கீழ்பகுதியில் ஒயர் அல்லது எலாஸ்டிக் உள்ள இறுக்கமான பிராவை நீங்கள் அணியும் போது இந்த நிலை ஏற்படும். எனவே, விளையாட்டு வீராங்கனைகள் அணியும் ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்து கொள்வது நன்மை தரும். நிறமிகள் உருவாதல் எலாஸ்டிக் இறுக்கமாக இருக்கும் பிரா உடலில் படும் இடங்களில் நிறமிகள் உருவாகும்.

தூங்கும் போது அல்லது பிராவை போட்டுக் கொள்வதா இந்த நிறமிகள் அதிகமாகும். எனவே, இது போன்ற விளைவுகளை தவிர்க்க விரும்பினால் மென்மையான மற்றும் தளர்வான பிராவை அணியவும். தூக்கம் கலைதல் நீங்கள் படுக்கையில் எவ்வளவு வசதியாக படுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே தூக்கம் எவ்வளவு ஆழமாகவும் மற்றும் சிறப்பாகவும் இருக்கும் என்பதை அறிய முடியும். நீங்கள் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டால், அது ஏற்படுத்தும் வசதியற்ற நிலையால், தூக்கம் கலைந்து விடும். தோல் எரிச்சல் இறுக்கமான பிராவை அணிவது தோல் எரிச்சலை உண்டாக்கும். கீழே ஒயர்கள் இல்லாத பிராக்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஸ்போர்ட்ஸ் பிராக்களை இரவு வேளைகளில் அணிவதும் நல்லது. உங்கள் மார்பகங்களுக்குத் தேவையான தாங்கும் சக்தியை அது தருவதுடன், சுகாதாரமாகவும் இருக்கும். ஓய்வின்மை தூங்கும் போது இறுக்கமான பிரா அணிவதால் எரிச்சல் ஏற்பட்டு, உங்களுடைய இரவு வேளையை ஓய்வில்லாத இரவாக மாற்றி விடும்.

அது தூங்கும் போது வசதியற்ற நிலையை ஏற்படுத்துவதால், தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மேலும், கீழே ஒயர் உள்ள பிரா உங்கள் மார்பகத்திற்குள் ஆழமாக சென்று விடும். நீர் வீக்கம் (Oedema – எடிமா) தொடர்ந்து நீங்கள் இறுக்கமான பிரா அணிந்து வந்தால் உங்களுக்கு நிணநீர் அடைப்பு (Lymphatic Blockage) ஏற்படும். இதன் காரணமாக இந்த அடைப்புடன் தொடர்புடைய வேறு பல அறிகுறிகளும் தோன்றும். மார்பகங்களில் ஏற்படும் எடிமா அல்லது நீர் வீக்கம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். தூங்கும் போது பிரா அணிவதால் ஏற்படும் மோசமான சுகாதார கேடுகளில் இதுவும் ஒன்றாகும்.

வியர்வை கோடை காலங்களில் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டு தூங்குவதால் நிறைய வியர்வை வெளியேறும். கடைகளில் விற்கும் ஃபேன்ஸி பிராக்கள் இந்த விளைவையே அதிகமாக செய்கின்றன. எனவே, பாலியஸ்டர் அல்லது சணல் போன்ற செயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட பிராவிற்கு பதிலாக காட்டன் பிராவை தேர்ந்தெடுங்கள். புற்றுநோய் தூங்கும் போது பிரா அணிவதால் புற்றுநோய் வருமா என்று ஒரு பெரிய விவாதம் நெடு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. புற்றுநோய் அல்லாத கட்டிகள் நீர்க்கட்டிகள் மற்றும் தோல் கட்டிகள் நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகும்.இறுக்கமாக ஒடுங்கியிருக்கும் வகையிலான பிரா அணிவதால் எரிச்சல் ஏற்படும். முறையற்ற வகையிலர் வெளியேறும் கழிவுகளால் வலியற்ற கட்டிகள் ஏற்படும் என்று டாக்டர்.ஜான் மெக்டௌகால் என்பவர் எழுதியுள்ள “தி மெக்டௌகால் ப்ரோகிராம் ஃபார் ஏ ஹெல்த்தி ஹார்ட்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்
girls can be sleep with bra

Related posts

பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையானது எது?

nathan

Home Remedies for Breast Enlargement – மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். ஏன் அப்படி நடக்கிறது, அதை எவ்வாறு தவிர்ப்பது

nathan

பெண்களுக்கு தற்காலத்தில் அதிகமாக பாதிக்கும் நோய் தான் கற்பப்பை புற்று நோய்! அவதானமாக இருக்க இத படிங்க!..

sangika

ஆய்வு முடிவுகள்.!பாவாடை கட்டினால் புற்று நோயா.?

nathan

குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் வராத போது என்ன செய்யலாம்

nathan

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்

nathan

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?–உபயோகமான தகவல்கள்

nathan

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika