25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
unnamed 15
மணப்பெண் அழகு குறிப்புகள்

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க

பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

* மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைக­ளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்

* எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.

* மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

* கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சை சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்

* கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 1-2 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.
unnamed 15

Related posts

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில ஐடியாக்கள்…

nathan

A Bride Reception Saree for Every Style | ஒவ்வொரு ஸ்டைலுக்கும் ஏற்ற மணமகள் வரவேற்பு சேலை

nathan

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

மருதாணி … மருதாணி…

nathan

Bridesmaids Sarees : Simple Sarees

nathan

கற்பு, கன்னி தன்மை போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மட்டும் தானா..?

sangika

இவ்வாறான ஆண்மகனை தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையாக!…

sangika

மணப்பெண்க்கு டிப்ஸ்

nathan

இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்!…

sangika