24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
525012 384464895010074 1823247005 n
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள்.

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை
பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்
கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்
கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய் .
பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி
சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்
பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.
525012 384464895010074 1823247005 n

Related posts

பெண்கள் ஏன் சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்கிறார்கள் என்று தெரியுமா?

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும வரட்சியும் தீர்வுகளும்

nathan

கர்ப்பம் – குழந்தை பிறப்பு பற்றிய சில மூட நம்பிக்கைகள்

nathan

கர்ப்ப காலத்தில் புளிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய வேண்டுமென கூறுவார்கள் தெரியுமா?

nathan

கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது நல்லது

nathan

தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

nathan

கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் நல்லதா?

nathan

கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் இரத்த கசிவு

nathan