25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
28
ஃபேஷன்

லக லக லெக்கிங்ஸ்!

பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று சக்கைப்போடு போடுகிற ‘லெக்கிங்ஸ்’, ட்ரெண்ட் செட்டராகவும் விளங்குகிறது. கடந்த 5 வருடங்களாக பெண்களுக்கான பல்வேறு வகையான ஆடைகளை வடிவமைத்து சர்வதேச தரத்துடன் தயாரித்து வரும் ‘ட்வின்பேர்ட்ஸ்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான நெட்வொர்க் கிளாத்திங் கம்பெனி, பல வருடங்களாக பெண்களுக்கான ஆடைகளை ஏற்றுமதி செய்வதில் புகழ்பெற்றது. ‘ட்வின்பேர்ட்ஸ் லெக்கிங்ஸ்’ மிகக்குறுகிய காலத்தில் பெண்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்ட ரகசியத்தை விவரிக்கிறார் நிர்வாக இயக்குனர் ரவி.

ஃப்ரெண்ஸுடன் ஷாப்பிங், அவுட்டிங்குகளுக்கேற்றவை சுடிதார் லெக்கிங்ஸுடன் ‘கேஸுவல் டாப்ஸ்’

“லெக்கிங்ஸ் உடை அறிமுகமான புதிதில் அனைவருக்கும் ஒரே மாதிரி லார்ஜ் சைஸில் மிகவும் தொளதொளவென்று குறிப்பிட்ட சில வண்ணங்களில் மட்டுமே கிடைத்தது. அந்த நிலையை மாற்றி உலகம் முழுவதும் உள்ள இளம் பெண்களின் ஃபேஷன் சம்பந்தமான ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் லெக்கிங்ஸை சிறப்பாக வடிவமைக்கத் திட்டமிட்டோம். இதற்கென 10 ஆண்டுக்கான நீண்டகாலத் திட்டம் ஒன்றை வகுத்து பல வகையான அளவுகளில் லெக்கிங்ஸ்களை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்” என்று கூறும் ரவி தங்கள் பிராண்ட் வெற்றிபெற்ற சுவாரஸ்ய தகவல்களை கூறுகிறார்.

“கற்காலத்திலிருந்தே நிறங்களைப் பொறுத்தவரை ஆண்களுக்கு சிவப்பு, நீலம் என்ற இரண்டு வண்ணங்கள்தான் அட்ராக்டிவாகத் தெரியும். ஏனெனில், வேட்டைக்குச் செல்லும் போது ரத்தத்தையும், வானத்தின் நிறமான நீலத்தையும் மட்டுமே பார்த்துப் பழகியவர்கள். பெண்களோ, ஒரு நிறத்தை எடுத்துக் கொண்டால் அதில் 12 வகையான ஷேடுகளை கண்டுபிடிக்கும் திறன் மிக்கவர்கள். மில்லியன் ஷேடுகளை நினைவில் வைத்துக் கொள்ளும் பெண்களின் வண்ணமயமான ஆசைகளை நிறைவேற்றும் வகையில் பலநூறு வண்ணங்களில் ட்வின்பேர்ட்ஸ் லெக்கிங்ஸ் கிடைக்கிறது. இந்தியப் பெண்களின் நாகரிகத் தேவைகள் மற்றும் வாங்கும் திறன் போன்றவற்றில் மேற்கொண்ட நீண்ட கால ஆய்வின் அடிப்படையில், அனைத்து அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக கேமிசோல் போன்ற உள்ளாடைகள், விளையாட்டு உடைகள், சாதாரண உடைகள், யோகா & உடற்பயிற்சிக்கான உடைகள் மற்றும் இரவு உடைகள் என 35 வகையான கலெக் ஷன்களில், இன்று உலகம் முழுவதும் பெண்கள் ஆடை உலகில் எங்களுக்கென தனி பாணியை உருவாக்கியுள்ளோம். டீன்ஏஜ் மாணவிகள், கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல…

அலுவலகம் செல்லும் எல்லா வயது பெண்களும் உபயோகிக்கும் வகையிலான இந்த வடிவமைப்பு, லெக்கிங்ஸ் அணிபவர்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்யும். சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் சமூகப் பொறுப்புடன் எங்களுடைய உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. ட்வின்பேர்ட்ஸ் லெக்கிங்ஸ் 100 சதவிகித பருத்தி இழைகளால் நெய்யப்பட்டு, சரியான கட்டிங்கில் ஃபிட்டாக பொருந்தும்படி தைக்கப்படுவதால், இதை அணிந்துகொண்டு வாகனங்களை ஓட்டும்போதும், பணியிடங்களில் வேலை செய்யும் போதும் காற்றில் பறப்பது போன்று உணர்வீர்கள். உடற்பயிற்சி, யோகா, நடனப்பயிற்சி வகுப்புகளிலும் ஜிம்மில் பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும் சங்கடமில்லாத சௌகர்யமான உணர்வை பெறும் வகையில், நேர்த்தியான கட்டிங்கில் ட்ரான்ஸ்ஃபரன்ஸி இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீசனுக்கேற்ற நூற்றுக்கு மேற்பட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைப்பதால் அவரவர் ஸ்கின்டோனுக்கேற்றவாறு தேர்ந்தெடுக்க முடியும்” என்கிறார் ரவி.

நாம் விரும்பிய இடங்களில் அமர்ந்து ‘சாட்டிங்’ செய்வதற்கேற்ற நார்மல் லெக்கிங்ஸ். ‘நார்மல் லெக்கிங்ஸ்’ கடற்கரை, பூங்காக்கள் போன்ற ரிலாக்ஸான தருணங்களுக்கேற்றது. நார்மல் லெக்கிங்ஸ், சுடிதார் லெக்கிங்ஸ் மற்றும் ¾ கேப்ரி லெக்கிங்ஸ் என மூன்று வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களில் 6 சைஸ்களில் கிடைக்கிறது.

யோகா, உடற்பயிற்சி, நடனப்பயிற்சி மற்றும் ஜிம் வகுப்புகளில் எளிதில் இசைந்து கொடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ‘கேப்ரி’ முக்கால் பாக லெக்கிங்ஸ் மிகவும் செளகர்யமான உணர்வை கொடுக்கக்கூடியது.
28

Related posts

உலகின் விலையுயர்ந்த அழகிய காலணிகள்

nathan

நைட்டியா இது…?! ஆச்சர்யப்படுத்துகிறார்கள் மாணவிகள்!

nathan

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடை

nathan

ஆபரணம் வாங்குவது எப்படி?

nathan

புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?

nathan

ப்ரைடல் ப்ளவுஸ் – விதவிதமான வடிவமைப்பும் அசத்தும் டிசைன்களும்

nathan

இனி பெண்களும் லுங்கி அணியலாம்!

nathan

உன்னையே நீ அறிவாய்!

nathan