25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
9e30ee8c 533c 4a40 a04b 5b5b3837308b S secvpf
மருத்துவ குறிப்பு

குழந்தை தாய்பால் குடிக்க மறுப்பது ஏன்?

குழந்தை பால் குடிக்கவில்லையென்றால் அது தாய்மார்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கும்.

உங்கள் குழந்தைக்கு பால் மட்டுமே ஆகாரமாக இருந்து, அதனை குழந்தை குடிக்க மறுத்தால் நீங்கள் குழந்தை நல மருத்துவரை உடனே அணுகுதல் மிகவும் முக்கியம். கைக்குழந்தை பால் குடிக்க மறுக்கும் சூழல் பெற்றோருக்கு பிரச்சனை அளிப்பதாகவும், மிகுந்த சவாலாகவும் இருக்கும்.

இத்தகைய சூழல் திடீரென உருவாகி இருக்குமானால், ஏதேனும் பிரச்சனை என்றோ, உங்கள் குழந்தை ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளது என்றோ அர்த்தம். அதனாலேயே அது பால் குடிக்க மறுத்திருக்கலாம்.

ஆனால் இத்தகைய சூழல் பிறப்பிலிருந்தே நிலவி வருமானால், குழந்தைக்கு தாயின் மார்பிலிருந்து பால் குடிப்பதில் ஏதோ அசௌகரியம் இருப்பதாகவே அர்த்தம்.

சில வேளைகளில் பிறந்தவுடன் தாயின் முளைக்காம்பைப் பற்றி பால் குடிக்கும் செயலைத் தொடங்குவது குழந்தைக்கு சிரமமாக இருக்கும். சில சமயங்களில் முதல் சில தடவைகளில் சாதாரணமாக பால் குடிக்கிய குழந்தை போகப் போக அது பால் குடிக்க கற்றுக்கொள்ளும் சமயத்தில் சில நேரம் பால் குடிக்க மறுக்கலாம்.

குழந்தை பிறப்பில் இருந்து பால் புகட்டுவதில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி பல நாட்கள் கழிந்த பின்னரும் கூட இப்பிரச்சனை எழலாம். இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் நிறைய உள்ளன. உங்களின் குழந்தை பால் குடிக்க மறுப்பதற்கு இவற்றுள் எது காரணமாக உள்ளது என்பதைக் கண்டறிந்தால் தான் அதனை நீங்கள் சரிப்படுத்த முடியும்.

குழந்தையை தூக்கியவுடனேயே அது அழுகிறதா அல்லது பால் கொடுக்க முயற்சிக்கும் போது மட்டும் தான் அழுகிறதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். சில குழந்தைகள் தங்கள் வாய்க்கு ஒவ்வாத காரணத்தினால் எதையுமே வாய் மூலம் உட்கொள்ள விரும்பாமல் பால் குடிக்க மறுப்பர்.

சில வேளைகளில் பாலின் வரத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை தாய் அறிவதில்லை.

அதனால் கூட குழந்தை பால் குடிக்க மறுக்கலாம். குழந்தை பால் குடிக்க விரும்பாத பட்சத்தில், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். மேலும், இந்த பிரச்சனை குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகாவிட்டால், குழந்தை நல மருத்துவரை உடனடியாக அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம்.

குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில், குழந்தை பாலை மட்டுமே உட்கொள்ளும் பட்சத்தில் இத்தகைய சூழல் உருவாகுமானால் கூடிய விரைவில் மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியம்.
9e30ee8c 533c 4a40 a04b 5b5b3837308b S secvpf

Related posts

முடி வேண்டுமா… உயிர் வேண்டுமா?

nathan

இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை!

nathan

சித்த மருத்துவத்தில் சில முக்கிய நோய்களுக்கு மருந்துகள்

nathan

குழந்தைகள் தவறான விஷயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?

nathan

இறந்த தாயின் வயிற்றிலிருந்து 123 நாட்கள் கழித்து உயிருடன் பிறந்த ட்வின்ஸ்!

nathan

அதிகளவில் சிசேரியன் நடக்க காரணம் என்ன?

nathan

தைராய்டு ஆபத்தை அதிகரிக்கும் உங்களின் ஐந்து உடல்நல கோளாறுகள்!

nathan

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள் ?

nathan

இயற்கை வைத்தியத்தில் நோய்களுக்கான எளிய மருத்துவ குறிப்புகள்

nathan