25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 1 arachuvitta vatha kuzhambu 1669362271
சமையல் குறிப்புகள்

சுவையான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்:

* புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* முருங்கைக்காய் – 2

* சுண்டக்காய் வத்தல் – ஒரு கையளவு

* கறிவேப்பிலை – சிறிது

* கடுகு – 1 டீஸ்பூன்

* துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு…

* கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 6

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* அரிசி – 1 டீஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முருங்கைக்காயை 2 இன்ச் துண்டுகளாக வெட்டி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், மிளகு, அரிசி, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு 2 கப் நீரை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்நீரில் புளியைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் கையால் பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அப்படி வதக்கும் போது குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். இல்லாவிட்டால் கருத்துவிடும்.

Arachuvitta Vatha Kuzhambu Recipe In Tamil
* பின் வறுத்த சுண்டைக்காயை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, துவரம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைப் போட்டு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையைப் போட்டு, குறைவான தீயில் வைத்து குழம்பை 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் சிறிது நீரில் அரைத்த பொடியை கரைத்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் சேர்த்து, மீண்டும் 7-8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் போது குழம்பானது சற்று கெட்டியாவதை காண்பீர்கள்.

* இறுதியாக வெல்லம் மற்றும் வறுத்த சுண்டைக்காயை குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு தயார்.

Related posts

சுவையான காளான் குருமா

nathan

பன்னீர் பெப்பர் ப்ரை

nathan

வேப்பம் பூவை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள் அதிக நன்மை கிடைக்கும்!..

sangika

சுவையான பட்டர் குல்ச்சா

nathan

கோபி மஞ்சூரியன் ரெசிபி

nathan

கத்திரிக்காய் மசாலா குழம்பு

nathan

இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்….

sangika

சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி

nathan

சூடான உருளைக்கிழங்கு அவல் உப்புமா

nathan