25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
s00286
பெண்கள் மருத்துவம்

உடல் பருமன் எப்படி குழந்தை பாக்கியத்தைப் பாதிக்கும்?

உடல் பருமன் என்பது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அதில் முக்கியமான பாதிப்பு குழந்தை பாக்கியத்தைத் தடுப்பது தான். உடல் பருமன் பெண்கள் கருவுறுதலை மட்டும் பாதிப்பதில்லை ஆண்களின் விந்து உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாக்கியம் தாமதாக நடப்பதுடன், பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி கருசிதைவும் ஏற்படும் நிலையும் உள்ளது.

உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியாவதில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் சினைப்பையில் கட்டி ஏற்பட்டு கருவுறுதல் மேலும் சிக்கல் அடைகின்றது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் பாதிப்பும் உடல் பருமனால் ஏற்பட்டு கருவுறுதலை பாதிப்பதுடன், சில நேரத்தில் பிரசவ காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உடல் பருமன் ஹார்மோன் குறைப்பாட்டைக் ஏற்படுத்தும். இதனால் கருமுட்டை மற்றும் விந்து உற்பத்தி பாதிப்பு அடைகின்றது. ஆகவே குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தால், தயவு செய்து உடல் எடையில் கவனம் கொள்ளுங்கள். அதற்காக பலவற்றை முயற்சி செய்து உடல் எடையை அதிகமாக குறைத்தாலும் ஆபத்து தான். கூடுதல் உடல் எடை குறைவும், குழந்தை பாக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே சரியான உடல் எடை குழந்தை பாக்கியம் பெற மிக மிக அவசியம்.

கருவுறுதலை பாதிக்கும் உடல் பருமன்

உடல் பருமன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீங்கள் உடல் எடையைக் கூட்டி கொண்டே சென்றால், குழந்தைப் பெறும் பாக்கியத்தை குறைத்து கொண்டே வருகின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் பருமன் சினைமுட்டை உற்பத்தியில் குறைப்பாட்டை ஏற்படுத்துவதுடன், ஓவுலேஷன் பாதிப்பையும் ஏற்படுத்துவதால் அதிக உடல் பருமனில் கவனம் மிக மிக அவசியமாகின்றது.

குழந்தை பாக்கியத்தை பாதிக்கும் அதிக உடல் பருமன்

உடல் பருமன் இருப்பதால் ஒபிசிட்டி பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் பெண்களுக்கு ஓவுலேஷனின் எண்ணிக்கை குறைகின்றது. இதனால் சினை பையில் கட்டிகளும் வரும் ஆபத்து அதிகம். இவ்வகை பிரச்சனைகளால் ஐந்து சதவிகித பெண்கள் குழந்தைப்பேறு அடைய முடியாமல் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர்.

ஆண்களும் குழந்தைப் பெறுவதில் சிக்கல் மேற்கொள்கின்றனர்

ஆண்களின் கூடுதல் உடல் பருமன் அவர்களுக்கு பல வகைகளில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. முக்கியமான பிரச்சனை விந்து உற்பத்தி குறைபாடு. இதனால் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனுக்கு எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துவதால், அவர்கள் குழந்தை பாக்கியம் அடைவதில் பாதிப்பு நேர்கின்றது. ஆகவே ஆண்களும் உடல் பருமனை குறைப்பது மிக அவசியம்.

பருமனான பெண்கள் கருவுறுதல் இல்லை

நீங்கள் உடல் பருமனை குறைக்கவில்லையெனில் கருவுறுதலை மறந்திட வேண்டிய அபாயம் உள்ளது. சிலருக்கு கருவுறுதல் பல காலம் தாண்டி நடக்கலாம் அல்லது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்பும் குறையும். இந்த பாதிப்பு மட்டுமில்லாமல் சக்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தமும், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனால் pre-eclampia என்ற பாதிப்பு ஏற்படுவதால் குழந்தைப்பேற்றை கனவாகவே காணும் அபாயம் உள்ளது என்பதால் உடல் எடையை குறைத்து கொள்ளுங்கள்.

இதற்கு என்ன செய்யலாம்?

குழந்தையைப் பெற்றெடுக்கும் எண்ணத்தில் இருந்தால் ஒழுங்கான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டு, சரியான உடல் எடையை வைத்து கொள்வது மிக மிக அவசியம். இதனால் தாமதம் இல்லாமல் குழந்தைப் பிறப்பதுடன் ஆரோக்கியமான குழந்தையையும் பெற முடியும். ஆண்களின் உடல் பருமனும், பெண்களின் கருவுறுதலை பாதிப்பதால், ஆண்களும் சரியான உடல் எடையை வைத்திருப்பது அவசியம்.

உடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து

அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்கும் ஆபத்துள்ளது. முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும்.

மிகவும் ஒல்லியானவர்களும்.. கருவுறுதலும்..

அதிக உடல் பருமனால் மட்டும் பிரச்சனை இல்லை, உடல் எடை மிகவும் குறைவாக இருந்தாலும் கருவுறுதலில் பிரச்சனை உள்ளது. உடல் எடை மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஒராண்டு காலத்துக்கு மேல் தான் கிடைக்கின்றது. ஆகவே சரியான உயரத்திற்கு ஏற்ற எடையைப் பராமரித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.
s00286

Related posts

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ

nathan

கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல உடல் நலப்பிரச்னைகளும் உண்டு……

sangika

ஆண்களும் தெரிஞ்சிக்கலாமே,, இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

nathan

வெள்ளைப்படுதலை பற்றி மருத்துவரிடம் வெளிப்படையாக பேசுங்கள்

nathan

பெண்களுக்கு தற்காலத்தில் அதிகமாக பாதிக்கும் நோய் தான் கற்பப்பை புற்று நோய்! அவதானமாக இருக்க இத படிங்க!..

sangika

மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவுகிறது!…

sangika

உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறப்பை கொடுக்க….

sangika

குழந்தையில்லா பிரச்சனையா கவலையே வேண்டாம்!…

sangika

குழந்தை பிறந்த பிறகு பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

nathan