29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ht43887
பெண்கள் மருத்துவம்

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி?

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப படாதபாடுபடுவதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்aல… இரவில் அவர்களை தூங்க வைப்பதும். இதுபோல வாண்டு களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் பெற்றோருக்காகவே வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஓர் ஆங்கிலப் புத்தகம்!

கார்ல் ஜோஹன் ஃபார்ஸன் எர்லின் என்ற நீளமான பெயருக்குச் சொந்தக்காரர்தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
ஸ்வீடனைச் சேர்ந்த இவரது பெயரைப் போலவே, A new way of getting children to sleep: The rabbits who want to fall asleep என புத்தகத்தின் பெயரும் நீளமானதே!

ரோஜர் என்ற முயல்குட்டியைத் தூங்க வைக்க முடியாமல் போராடும் அம்மா முயலுக்கு, ஓர் ஆந்தை சொல்லித் தரும் ஐடியாக்கள்தான் கதை! ‘ரேடியோ கேட்டும், கதைகள் கேட்டும் வளர்ந்த பையன்தான் நான். ஆமாம். நான் கொஞ்சம் பழைய தலைமுறை’ என்று சங்கோஜத்துடன் சொல்லும் கார்ல் ஜோஹன், ‘குழந்தைகளுக்கு கதை சொல்லித் தூங்க வையுங்கள்’ என்பதுதான் இந்தப் புத்தகத்தில் சொல்லும் முக்கிய ஆலோசனை. உளவியல் மருத்துவரான ரங்கராஜனிடம் இது பற்றிக் கேட்டோம்.

”கதைகள் கேட்கும்போது குழந்தைகளின் கவனம் ஒரே இடத்தில் குவிந்து மனநிலை அமைதியாகிறது. இதனால் தூக்கம் எளிதாக வருகிறது. பெற்றோருடனும் குழந்தைக்கு இருக்கும் உறவும் இதன் மூலம் இன்னும் சிறப்பாக அமையும். நான் தனிநபர் இல்லை என்ற நம்பிக்கையும் குழந்தைக்கு ஏற்படும். கார்ல் ஜோஹன் சொல்வதைப் போல, நாமும் இரும்புக்கை மாயாவி முதல் விக்ரமாதித்தன் வரை பல கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள்தானே” என்கிறார் ரங்கராஜன்.
ht43887

Related posts

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika

சூப்பர் டிப்ஸ்!ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்கள் இந்த யோகாசனங்களை செய்யுங்கள்போதும்…!

nathan

முட்டைகோஸ் இலைகளை மார்பு மற்றும் கால்களில் வைத்து கட்டுவதால் உண்டாகும் நன்மைகள்!

nathan

பிறப்புறுப்பு கருத்தடை ஜெல் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

nathan

உஷாரா இருங்க…! உண்மையில் தூங்கும்போது பெண்கள் ப்ரா அணியலாமா கூடாதா ?

nathan

Home Remedies for Breast Enlargement – மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

கூடுதல் கொலஸ்ட்ராலால் அவதியுறும் பெண்கள்..

nathan

40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…!

nathan

பெண்களின் வயிற்று கொழுப்பு காரணம்

nathan