ld2152
சமையல் குறிப்புகள்

என் சமையலறையில்!

காய்கறி விற்கும் விலையில் தோலைக்கூட வீணாக்காமல் துவையல் செய்து சாப்பிடலாம். பரங்கிக்காய், பீர்க்கங்காய், பெங்களூர் கத்தரிக்காய் என்கிற செளசௌ, வாழைக்காய் போன்று ஏதாவது ஒன்றின் தோலை பொடியாக நறுக்கி எப்போதும் செய்யும் துவையல் போலவே செய்யலாம். சத்தும் வீணாகாது. சுவையும் புதுமை.

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி, அல்வா, மைதா கேக் என எந்த வகை இனிப்பையும் நான்ஸ்டிக் தவா பயன்
படுத்தி செய்தால், அடி பிடிக்காமல் கிளறுவதற்கும் எளிதாக இருக்கும். குளிர்ந்த தயிர் பச்சடியில் வழக்கமாகப் போடும் பொருட்களுக்குப் பதிலாக மெல்லியதாக அரிந்த முட்டைக்கோஸ், குடைமிளகாய், கொத்தமல்லி போட்டால் சுவை பிரமாதம்.

பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி போன்றவற்றை அரைத்து கிரேவி தயாரிக்கும் போது, தண்ணீருக்குப் பதிலாக சிறிதளவு பால் சேர்த்தால், கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி லேசாக எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதோடு 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 பல் பூண்டு, காய்ந்த மிளகாய் 4, உப்பு சேர்த்து அரைத்தால், சாதத்துடன் பிசைந்து சாப்பிட வாழைத்தண்டு பச்சடி ரெடி.

சாமை அரிசியை அரைத்து அதனுடன் பொட்டுக்கடலைமாவு, எள், ஓமம், பச்சைமிளகாய் சேர்த்து முறுக்கு செய்தால் குழந்தைகளுக்கு மொறுமொறுப்பான, சத்தான, சுவையான ஸ்நாக்ஸ் ரெடி! ரவா இட்லி செய்யும் போது சிறிது சேமியாவை வறுத்து ரவையுடன் தயிரில் ஊற வைத்து செய்தால் ருசியாக இருக்கும். அடைக்கு அரைத்த மாவு போதுமானதாக இல்லாமல் இருந்தால், அந்த மாவோடு கொஞ்சம் ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊற வைத்து சேர்த்து அடை வார்த்தால் அடையின் எண்ணிக்கை அதிகமாவதுடன், மென்மையான அடையாக இருக்கும்.

காலிஃப்ளவர் சமைக்கும்போது ஒரு துளி பால் சேர்த்தால் பூப்போன்ற வெண்மை மாறாமல் இருக்கும். பச்சை வாசனையும் வராது. உப்பு நார்த்தங்காய் போடும்போது காய்களை கழுவி, மஞ்சள்தூள் கலந்த தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு பின்பு வடிகட்டி 2 நாள் வெயிலில் வைத்து எடுத்தால் வருடக்கணக்கானாலும் கெடாமல் இருக்கும்.பொரியல் செய்யும் போது உப்பு, காரப்பொடி, மஞ்சள் பொடியை தனித்தனியே சேர்க்காமல், மூன்றையும் ஒன்றாக கலந்து சேர்த்தால், எல்லா காய்களின் மேலும் உப்பும் காரமும் சீராகப் படியும்.
ld2152

Related posts

கேரளா ஸ்டைல் வெங்காய புளிக்குழம்பு

nathan

மொஸரெல்லா சீஸ் வீட்டிலேயே செய்வது எப்படி..?

nathan

சுவையான பிரட் சாட் ரெசிபி

nathan

சுவையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு

nathan

ரவா கேசரி

nathan

கொண்டைக்கடலை சமைப்பது எப்படி ? | chickpeas in tamil

nathan

சுவையான காளான் மற்றும் பேபி கார்ன் மசாலா

nathan

சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார்

nathan

சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன்

nathan