33.3 C
Chennai
Saturday, Jul 26, 2025
biriyany
அசைவ வகைகள்

தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :

சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :
தயிர் – ஒரு கப்
பூண்டு – ஒன்று
இஞ்சி – ஒரு துண்டு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிது
பச்சைமிளகாய் – 2
லவங்கம் – 4
எலுமிச்சை – பாதி
மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
கஸூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பிரியாணி செய்ய :
அரிசி – அரை கிலோ
சிக்கன் லெக்பீஸ் – 4
வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
தாளிக்க :
பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ – தலா2

செய்முறை :
சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்

. ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.

அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தது ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.

அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.
biriyany

Related posts

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

nathan

முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

(முட்டை) பிரியாணி

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

வான்கோழி குழம்பு

nathan

செட்டிநாடு சிக்கன் கறி

nathan