28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
10993 763086860425944 3538905886266430377 n
சரும பராமரிப்பு

என்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமா?

சருமத்தில் அதுவரை இருந்த மிருதுத் தன்மைமாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும் பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக முக்கிய காரணம் வெயில். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும்.

30ல் அடியெடுத்து வைப்போருக்கு, கண்களுக்கடியில் மெலிதான கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போவது, சருமத்தில் ஆங்காங்கே சிவப்பு மற்றும் பிரவுன் நிறப்புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கடியில் வீக்கம், வாயைச் சுற்றியும் நெற்றியிலும் கோடுகள் போன்றவை தோன்றலாம். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புரதங்களின் சுரப்பு இன்னும் அதிகமாகக் குறையத் தொடங்குவதன் விளைவுகளே இவை.

40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்னைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான். அதனால் தான் , 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து, முதுமைத் தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும் இன்னும் சற்று ஆழமாகத் தெரியும்.

50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள். இளமையில் இருந்தே சருமப்பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப்போவதுடன், நீண்ட காலம் இளமைத் தோற்றம் தக்க வைக்கப்படுகிறது.

அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழுதானிய உணவுகள், மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
10993 763086860425944 3538905886266430377 n

Related posts

கவலை வேண்டாம். இதப்படிங்க … ‘கருவளையம்’ இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம்!!!

nathan

மார்பகங்களில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க உதவும் சில இயற்கை வழிகள்!

nathan

ஒரே ஒரு வாசலின் போதும். உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகுபடுத்தலாம்!! எப்படி தெரியுமா?

nathan

ஒட்டிய கன்னங்கள் பூசிய கன்னங்களாக கிடைக்க என்ன செய்யலாம்?

nathan

முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற இப்படி செய்து வாருங்கள்!…..

sangika

சரும சுருக்கத்தை போக்கும் வோட்கா பேஷியல்

nathan

சருமமே சகலமும்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் வீட்டில் இருந்தபடியே மெனிக்யூர் செய்வது எப்படி எனத் தெரியுமா

nathan

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இரவில் இதை செய்ய மறக்காதீங்க…

nathan