25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 tomato kara chutney 1667825950
சட்னி வகைகள்

தக்காளி கார சட்னி

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 4-5

* பூண்டு – 10 பல்

* தக்காளி – 5 (நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* புளிச்சாறு – 1 டீஸ்பூன் அல்லது 1 சிறிய துண்டு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே எண்ணெயில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Tomato Kara Chutney Recipe In Tamil
* இப்போது அந்த எண்ணெயில் தக்காளி, புளி, சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளி, பூண்டு, வரமிளகாய் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி கார சட்னி தயார்.

Related posts

பீட்ரூட் சட்னி

nathan

சூப்பரான கடலைப்பருப்பு தேங்காய் சட்னி

nathan

சுட்ட கத்திரிக்காய் சட்னி

nathan

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

nathan

சுவையான கேரட் சட்னி

nathan

சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

nathan

சுவையான தக்காளி முட்டை சட்னி

nathan

தேங்காய் – பூண்டு சட்னி

nathan

புதுமையான முள்ளங்கி சட்னி!!

nathan