தேவையான பொருட்கள்:
* பன்னீர் – 1 கப்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
* சிவப்பு வர மிளகாய் பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன் (4 காஷ்மீரி மிளகாய்/வர மிளகாயை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)
* தக்காளி சாஸ் – 1/2 கப்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு – 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 1/4 கப்
செய்முறை:
* முதலில் பன்னீரை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் பேஸ்ட், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்து, பின் அதன் மேல் எள்ளு விதைகளைத் தூவி இறக்கினால், சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன் தயார்.