26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
Untitled 4
அசைவ வகைகள்அறுசுவை

சிக்கன் மன்சூரியன்

சிக்கன் மன்சூரியன் என்ற இந்த சீன உணவு சமீப காலமாக இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பான்மையாக துரித உணவு கடைகளில் விற்கப்படும் இதனை சுவை மாறாமல் வீட்டில் செய்ய இந்த செயல்முறையை பயன்படுத்தவும்.

தேவையானவை:

கோழி கறி (எலும்பு நீக்கப்பட்டது) – 1/4 கிலோ
வெங்காயம் (நறுக்கியது) – 2
இஞ்சி (நறுக்கியது) – 5
பூண்டு (நறுக்கியது)- 1
மிளகு (பொடித்தது)
முட்டை – 1
இஞ்சி/பூண்டு/பச்சை மிளகாய் விழுது
மைதா மாவு
சோயா சாஸ்
சில்லி சாஸ்
வினிகர்
சோள மாவு
தக்காளி சாஸ்
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை:Untitled-4

கோழி‌க் கறியை மிளகு தூள், முட்டை, உப்பு, இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது, சோள மாவு, சிறிது அளவு தண்ணீர் சேர்ந்த கலவையில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த கோழிகறியை சிறு உருண்டைகளாக பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் பொறித்து எடுத்த கோழி‌க்கறி துண்டுகளை சேர்த்து நான்கு நிமிடங்களுக்கு சமைக்கவும். இதனோடு தேவைகேற்ப உப்பு, சோள மாவு சேர்த்து இறக்கவும்.

Related posts

செட்டிநாடு மட்டன் பிரியாணி

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!

nathan

ஆனியன் சிக்கன் வறுவல்

nathan

பன்னீர் மசாலா

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

சூப்பரான ஐதராபாத் சிகம்புரி கபாப்

nathan

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan