25.5 C
Chennai
Tuesday, Feb 18, 2025
alaluva blogs
இலங்கை சமையல்

எள்ளுப்பாகு

தேவையான பொருட்கள்

எள்ளு 500 கிராம்

சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்)

உழுத்தம்மா 200 கிராம் வரையில்

முதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .பின் உழுத்தம்மாவு சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்றாக அரைபடக்கூடிய அளவு போட்டு சிறி துநேரம் நன்றாக கலந்து கொள்ளுமாறு அரைத்துக்கொள்ளுங்கள் அரைத்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாற்றையும் அரைத்து முடித்தபின் நன்றாக கொதித்த வெந்நீரை கலவையினுள் விட்டுக் கொள்ளுங்கள் கலவையை களி போன்றவரும் வரை வெந்நீர் சேருங்கள் கொஞ்சம் கூடினால் சிறிது நேரம் விட்டுவிட்டால் இறுக்கமாக வந்துவிடும்

பின் உங்களுக்கு விரும்பிய அளவில் உருண்டைகளாக செய்து கொள்ளுங்கள் .நீங்கள் உருண்டைகளை இறுக்கமாக பிடிக்கும்போது அதிலிருந்து எண்ணை வரும்.
alaluva+blogs

Related posts

யாழ்ப்பாணத்து குழல் புட்டு நீங்களும் சுவைத்து பாருங்க !!

nathan

பஞ்சரத்ன தட்டை

nathan

சுட்ட கத்திரிக்காய் சம்பல்

nathan

இலங்கை ஸ்டைலில் சுவையான ஜவ்வரிசி கஞ்சி…

nathan

நீலக்கால் நண்டுக்கறி – யாழ்ப்பாணம் முறை

nathan

ஹோட்டல் தோசை

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு

nathan

பருத்தித்துறை வடை

nathan