P20
மருத்துவ குறிப்பு

பித்தப்பை கல் ! அறிகுறிகளை அறிவோம்!

அறிகுறிகளை அறிவோம்!
கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீர், பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு, சிறிய குழாய் போன்ற உறுப்பு வழியாக, உணவு செரிமான மண்டலத்தை அடைகிறது. பலருக்கு பித்தப்பையில் கல் உருவாகியிருக்கும். ஆனால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேறு காரணத்துக்காக பரிசோதனை செய்யும்போதுதான் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவரும். பித்தப்பை கல், பித்தப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் பாதிப்புகள் வெளிப்படும்.

அறிகுறிகள்

வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும்.

இதர அறிகுறிகள்:

காய்ச்சல்

விட்டுவிட்டு வலி

அதிவேக இதயத் துடிப்பு

மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பது)

தோலில் அரிப்பு

வயிற்றுப்போக்கு

வாந்தி

குமட்டல்

குளிர் காய்ச்சல் அல்லது நடுக்கம்

குழப்பம்

பசி இன்மை

அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல்

வலது தோள்பட்டையில் வலி

யாருக்கு எல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

பெண்கள்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

உடல் பருமனானவர்கள்

கர்ப்பிணிகள்

உணவில் அதிக அளவில் கொழுப்புச் சத்து சேர்த்துக்கொள்பவர்கள்

உணவில் நார்ச்சத்து குறைவாக சேர்த்துக்கொள்பவர்கள்

சர்க்கரை நோயாளிகள்

உடல் எடையை மிக வேகமாகக் குறைப்பவர்கள்

கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்

ஹார்மோன் தெரப்பி சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜென் உள்ள மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்

மரபு ரீதியாக பித்தப்பை கல் பாதிப்பு உள்ளவர்கள்

தப்பிக்க…

பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால், வாய்ப்பைக் குறைக்க முடியும்.

உணவு

தினமும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

எடை குறைக்க அவசரம் வேண்டாம்: உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும்போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வாரத்துக்கு அரை முதல் ஒரு கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது.

சீரான எடை

உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை என்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்குத் தேவையான கலோரியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும், உடல் உழைப்பு மூலம் அதிகப்படியான கலோரியை எரிக்க வேண்டும்.
P20

Related posts

மூளையை பாதிக்கும் செயல்கள்

nathan

வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

உங்க குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! சூப்பரா பலன் தரும்!!

nathan

ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புச் சிதைவு நோய்!

nathan

மார்பகப் புற்றுநோய் ஏற்பட என்ன காரணங்கள் தெரியுமா..?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

மார்பகப்புற்று… பரிசோதனைகள்!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு! நோய் நாடி!

nathan

கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’அங்க’ ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!

nathan

தெரிஞ்சிக்கங்க… எடை தூக்கும் பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியாத 9 விஷயங்கள்!!!

nathan