27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
மருத்துவ குறிப்பு

குழந்தைப்பேறு அளிக்கும் மாத்திரை ..

முதியவரும் பல புதல்வர்களை உண்டாக்க முடியக்கொடிய ஒரு வீட்டிலேயே செய்யக்கொடிய ஒரு சமையல் மாதிரி ஒரு மாத்திரை

செய்முறை –


தூய்மையானதும் ,ஈரப்பசையுள்ளதுமான அறுபதாங் குறுவை அரிசி யினை(நவ சஷ்டிக்க ஷாலி தானியம்) பாலில் ஊற வைக்க வேண்டும்
பெரிய உரலில் பால் சேர்த்து (மேலே கூறப்பட்ட ஊறவைத்த அரிசியினை )அரைக்க வேண்டும் (உரலில் குத்த வேண்டும் )
நன்றாக மைய்ய அரைக்கப்பட்ட அரிசியின் சாருடன் மேலும் சம அளவு பால் சேர்த்து கல்வத்தில் (பழைய கிரைண்டர் மாதிரி) அரைக்க வேண்டும்
இதன் சாறினை பிழிந்து வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும் …
இந்த சாறில் பூனைக்காலி விதை சூர்ணம் + பூனைகாலி விதை கசாயம் ,உளுந்து கசாயம் (விந்து அணு குறைப்பாட்டை தீர்க்கும் ) ,சிற்றாமுட்டி கசாயம்,அதிவிடயகிழங்கு உடன் கீரை பாலை ,ஜீவந்தி க்வாதம் ,ஜீவனிய கன க்வாதம்,நெருஞ்சில் முல்.அதிமதுரம் ,தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவரி),பால்முதுக்கன் கிழங்கு ,திராக்ஷை ,பேரிச்சை இவற்றை தனி தனியாக கஷாயமாகவோஎடுத்து ,மேலே எடுக்கப்பட்ட சாறை கொதிக்கவைத்து பாலிலே காய்ச்ச வேண்டும்-இது நாலில் ஒரு பங்காக சுருங்க வைக்க வேண்டும் ..
இதனுடன் -மூங்கிலுப்பு ,நெய்யில் வருத்த உளுந்து ,அறுபதாங் குறுவைஅரிசி இவற்றின் பொடியினை கலந்து ஒரு கெட்டியான உருண்டை போல் பிசைந்துகொள்ளவேண்டும் ..
இந்த கலவையுடன் தேன்,சர்க்கரை சேர்த்து இலந்தை அளவுக்கு மாத்திரையாக உருட்ட வேண்டும்
இந்த உருண்டையினை நெய்யில் வறுக்க வேண்டும்

பயன்படுத்தும் முறை –
செரிக்கும் ஆற்றல் அறிந்து பால் அல்லது மாம்ச சாறுதான் காலை மாலை தேவை கருதி -அதிகமாகவோ ,ஒன்று அல்லது இரண்டோ சாப்பிடவேண்டும்

பயன் –

இந்த மாத்திரையை பயன் படுத்தினால் முதியவரும் பல புதல்வர்களை உண்டாக்க முடியும்
வயதானவரும் குறைவின்றி விந்தை பெறலாம் .

ஆதாரம் -சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டாவது அத்தியாயம் -இரண்டாவது பாதம்,பாட்டு 3-9

உணவே மருந்து-மருந்தே உணவு -என்ற கோட்பாட்டின் கீழ் -மிக எளிதாக அனைவராலும் எளிதாக செய்து கொள்ளகூடிய ஒரு விசயம் இது ..

குறிப்பு -மேலே கூறியுள்ள மூலிகை ஒன்று அல்லது இரண்டு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ..

Related posts

பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்க சங்கோஜப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்!!!

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைதான்..

nathan

சிகரெட்டால் வரும் நோய்கள்

nathan

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

nathan

கசக்கும் இல்லறம் – இனிக்கும் கள்ள உறவு

nathan

இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல்

nathan

குழந்தைங்க இப்படி நடந்தித்துகிட்டா அவங்க மோசமான பிரச்சினையில் சிக்கியிருக்காங்கனு அர்த்தமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

எடை தூக்கினால் குடல் இறங்குமா?

nathan

மதுவும் மீளமுடியாத மயக்கமும்

nathan