27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
fish roll212
சிற்றுண்டி வகைகள்

ஃபிஷ் ரோல்

ஃபிஷ் ரோல் தேவையான பொருட்கள்
மீன் – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
சீனி – 1 டீஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
முட்டை – 2
ப்ரெட்க்ரம்ஸ் – 2 கப்
கொத்தமல்லி – சிறிது

ஃபிஷ் ரோல் செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீனி சேர்த்து பூரி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும். மீனை அவித்து முள், எலும்பு ஆகியவற்றை நீக்கி சதைப் பாகத்தை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். மைதா மாவை போட்டு 2 நிமிடம் கிளறி, உதிர்த்து வைத்துள்ள மீனையும் போட்டு கிளறி, கொத்தமல்லி போட்டு இறக்கவும். பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவில் ஒரு சிறிய உருண்டை எடுத்து பூரி போல் தேய்த்து அதற்கு நடுவில் மீன் கலவையை 2 டேபிள் ஸ்பூன் அளவு வைத்து பூரியை பாய்போல் சுருட்டி மேல்புறமும், கீழ்புறமும் உருளைக்கிழங்கு மாவால் மூடவும். மீன் ரோலை நன்கு அடித்து வைத்துள்ள முட்டையில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸீடன் பரிமாறவும்.fish roll212

Related posts

கேரளா உன்னி அப்பம்

nathan

ஈஸி வெஜ் கட்லட்

nathan

சில்லி சப்பாத்தி

nathan

அரைத்து செய்யும் பஜ்ஜி

nathan

Super சிக்கன் வடை : செய்முறைகளுடன்…!

nathan

ஹராபாரா கபாப்

nathan

ரவா நிம்மபண்டு புளிஹோரா

nathan

காளான் கொழுக்கட்டை

nathan

பிரட் பஜ்ஜி

nathan