25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 60a47b3114623
மருத்துவ குறிப்பு

சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை சொல்லும்

உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும். அதை வைத்து கிட்னி நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம்.

வைக்கோல் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் அது ஆரோக்கியமான சிறுநீராக கருதப்படுகிறது. இதை தவிர மற்ற எந்த ஒரு நிறமாக சிறுநீர் இருந்தாலும் சரி, உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டு அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறிக்கொண்டே போனால் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருகிறது என அர்த்தமாகும். நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டி வரும். சிறுநீர் அதிக அடர்த்தியான நிறத்தில் இருந்தால், கடுமையான மனத்துடன் வெளியேறும். சில உணவுகளும் கூட உங்கள் சிறுநீரை அடர்ந்த மஞ்சளாக மாற்றும். உதாரணத்திற்கு, பீட்ரூட் உட்கொண்டால் உங்கள் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறும்.24 1429872552 coverhomeremediestocuresmellyurine

பொதுவாகவே நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் தான் சிறுநீரின் நிறம் மாறுதல் சம்பந்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் நீங்கள் உண்ணும் உணவு மற்றும் மருந்துகளின் அடிப்படையிலும் கூட சிறுநீரின் நிறம் மாறலாம். மருந்து உண்ணுவதை நிறுத்தியவுடன் சிறுநீரின் நிறமும் இயல்பு நிலைக்கு மாறலாம்.

உங்கள் சிறுநீர் தெளிவாக தெரிந்தால், நல்ல நீர்ச்சத்துடன் உள்ளீர்கள் என்பதை அது குறிக்கும். இருப்பினும் சில நேரங்களில், நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடிக்கிறீர்கள் என்பதையும் கூறும். இதனால் தண்ணீர் நஞ்சாதல் ஏற்படும் இடர்பாடு உள்ளது. அளவுக்கு அதிகமான நீர்ச்சத்து என்றால் நீங்கள் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என அர்த்தமாகும். இதனால் உடலில் உள்ள உப்புகளை நீர்த்து போக செய்து உடலுக்கு தீங்கை விளைவிக்கிறீர்கள். இது எந்த ஒரு ஆபத்தான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தாது தான். ஆனாலும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என உடலை கஷ்டப்படுத்தாதீர்கள்.

நல்ல தெளிவாக, நிறமே இல்லாமல் சிறுநீர் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ச்சியான தாகம் மற்றும் தொடர்ச்சியான சிறுநீர் கழித்தால் ஆகியவை இதற்கான மற்ற அறிகுறிகளாகும். அதிகமாக எப்போ பார்த்தாலும் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால, நீங்கள் சர்க்கரை நோய்க்கான சோதனையை மேற்கொள்ள வேண்டும். நிறமே இல்லாத சிறுநீரும் கூட உடல் நலத்தில் தாக்கத்தை கொண்டிருக்கும்.urine

உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருந்தால், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும். நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறலாம். உங்கள் நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்றால், மலம் மூலமாக வெளியேற வேண்டிய பித்த உப்புகள் சிறுநீர் வழியாக வெளியேறும். அதற்கு காரணம் இரத்தத்தில் அவைகள் அடர்த்தியாக இருப்பதே. ஹெபடைடிஸ் (ஈரல் அழற்சிபறை) எனப்படும் நுரையீரல் அழற்சி, இதற்கான ஒரு உதாரணமாகும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் கூட இப்படி ஏற்படலாம். அதனால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிறுநீரில் இரத்தம் கலக்கும் போது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேற்றும். இதனை ஹீமெச்சூரியா என கூறுகிறார்கள். சிவப்பு என்றாலே பொதுவாக எச்சரிக்கைக்கான நிறமாகும். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள், கிட்னி மற்றும் சிறுநீர்ப்பைகளில் கற்கள், கிட்னி, புரோஸ்டேட் அலது சிறுநீர்ப்பையில் புற்று நோய் போன்ற காரணங்களால் இரத்த கசிவும் சிவப்பு சிறுநீரும் வெளியேறும். இந்த நிலை ஏற்படும் போது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் சிறுநீர் கழிப்பதே சிரமமாகி விடும். நீங்கள் உட்கொண்ட சில உணவுகளாலும் கூட உங்கள் சிறுநீரின் நிறம் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் வெளியேறும். அதனால் நீங்கள் முதலில் அதனை நிறுத்தி விட்டு பார்க்க வேண்டும். பீட்ரூட், ப்ளாக்பெர்ரி போன்ற உணவுகள் இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் உணவுகளால் இந்த நிறம் மாற்றம் ஏற்படாமல், பல முறை நடந்தால், அது ஆபத்தான உடல்நல பிரச்சனையாக கூட இருக்கலாம்.

சீழ் இருந்தால் சிறுநீர் பச்சை நிறத்தில் வெளியேறலாம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிறுநீரக பாதை தொற்றுக்கள் தான். தண்ணீர் விட்டான் கொடி போன்ற உணவுகளாலும் கூட இது ஏற்படலாம். இவைகளை சாப்பிட்ட பின் சிறுநீர் கழிக்கையில் ஒரு வித மனமும் உண்டாகும். கருப்பு அதிமதுரம் அல்லது குடல்களில் உறிஞ்சப்படாமல் இருக்கும் அடர்த்தியான நிறங்களை கொண்டுள்ள சில உணவுகளும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண்டி-பையாடிக்ஸ் போன்ற சில மருந்துகளை உண்ணுவதாலும் கூட சிறுநீர் பச்சையாக வெளியேறும்.

நுண்ணிய இரத்தம் இருப்பதால் பால் நிறத்திலான சிறுநீர் வெளியேறலாம். சிறுநீர் பாதையில் தொற்று, பித்தப்பை தொற்று அல்லது கிட்னி கற்கள் போன்றவைகளாலும் கூட இது ஏற்படலாம். வெட்டை நோய் போன்ற பாலியல் ரீதியான நோய்களால் கூட உங்கள் சிறுநீரின் நிறம் மாறலாம். யோனிமடற்கழிவு ஏற்பட்டாலும் கூட சிறுநீர் பால் நிறத்தில் வெளியேறும்.

நுரை கலந்துள்ள சிறுநீர் சிறுநீரில் புரதம் வெளியேறினாலும் கூட இது ஏற்படலாம். இது கிட்னி அல்லது பித்தப்பை பிரச்சனியாக இருக்கலாம். எனவே இந்த நிலையை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இது ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

Related posts

உங்க பாதம் அடிக்கடி சில்லுன்னு ஆகுதா? இந்த காரணங்கள் இருக்கலாம்!!

nathan

முகத்தில் ரோமங்கள் நீங்க—இய‌ற்கை வைத்தியம்

nathan

ஆண் பெண் மூளை வித்தியாசம்

nathan

சிறகுகள் தந்த இனிய கணவர்களுக்கு மனைவிகளின் பிரிய நன்றிகள்!

nathan

ஹார்மோன் மாற்றங்கள் உஷ்ணத்தால் பெண்கள் சந்திக்கும் உடல் பிரச்சனைகள்

nathan

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

nathan

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

nathan

பன்றி காய்ச்சலின் அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? சிசேரியன் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan