23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11 1890572g
மருத்துவ குறிப்பு

புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகள்!

1. உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் அவற்றை உடனே கவனித்துவிட வேண்டும். வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. காரணம் புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும்.

சில நாட்களில் குணமாகாத கட்டியோ, வீக்கமோ இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும். பெண்களுக்கு மார்பகத்தில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி தோன்றினால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். காரணம் பெண்களை மார்பகப் புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும்தான் அதிகளவில் தாக்குகின்றன.

2. திடீர் எடை குறைவும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். சிலர் அதற்குத் தாங்களாகவே ஏதாவது காரணம் கற்பித்துக் கொள்வார்கள். இது தவறு. நன்றாகச் சாப்பிட்டும் உடல் எடை தொடர்ந்து குறைகிற மாதிரி இருந்தால், அதை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறவேண்டும்.

3. உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.

3. உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே.

4. காலைக் கடனில் ஏற்படும் திடீர் மாற்றமும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிக்கல்தான். சிலருக்குத் திடீரென வயிற்றுப்போக்கோ, மலச்சிக்கலோ ஏற்படலாம். இது ஓரிரு நாட்களில் சரியாகாமல் தொடர்ந்தபடி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

புற்றுநோய் அதிகம் தாக்கும் உறுப்பு எது?

இந்தியாவில் 2012-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். 2008-2011 வரையில் திரட்டப்பட்ட தகவல்களின்படி இது தெரிய வந்துள்ளது.

தேசியப் புற்றுநோய் பதிவு திட்ட (National Cancer Registry Programme – NCRP) அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான காலத்துக்குத் தயாரித்த அறிக்கை, இந்தியாவில் காணப்படும் புற்றுநோய் வகைகள் குறித்தும் அவை அதிகமாக உள்ள பகுதிகள் குறித்தும் சில முக்கியக் குறிப்புகளைத் தெரிவிக்கிறது. இந்தியாவில் 2012-ல் 6,82,830 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 3,56,730,பெண்கள் 3,26,100. அதாவது வளர்ந்தவர்களில் ஒரு லட்சம் பேரில் 64.49 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். உலகம் முழுக்க 2012-ல் 82 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, திரிபுரா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் பதிவாகியிருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.) ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

முதல்முறையாக, வட கிழக்கு மாநிலங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தின் மேல்பகுதிகளில்தான் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வாய்க்குழி, வாயும் உணவுக்குழாயும் இணையுமிடம், தொண்டையின் கீழ்ப்புறம், குரல்வளையின் மேல் பகுதி ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அசாமிலும் மேகாலயத்திலும் உணவுக்குழாய் புற்றுநோய் சகஜம். சிக்கிம், மிசோரத்தில் வயிற்றுப் புற்றுநோய் அதிகம்.

பெண்களைப் பொருத்தவரை மார்பகப் புற்றுநோயும் கருப்பைவாய்ப் புற்றுநோயும் அதிகம். மணிப்பூர், மிசோரத்தில் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம். மேகாலயத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் அதிகம். தைராய்டு சுரப்பியிலும் மார்பகத்திலும் புற்றுநோய் ஏற்படுவது கேரளத்தின் கொல்லம், திருவனந்தபுரத்தில் அதிகம்.

வயது அடிப்படையில்

உலகம் முழுக்கப் புற்றுநோயைக் கணக்கிடவும் மதிப்பிடவும் வயதை அலகாகக்கொள்வது வழக்கம். அதை ஏ.ஏ.ஆர். (Age adjusted or Age standardized rate) என்பார்கள். மேகாலயம் (கிழக்கு காசி மலை மாவட்டம்), மிசோரம் (அய்ஜால் மாவட்டம்), அசாம் (காமரூபம் மாவட்டம்) ஆகியவற்றில் ஏ.ஏ.ஆர். அதிகம். இங்கெல்லாம் உணவுக்குழாய், உணவுக்குழாயும் வாயும் இணையும் பகுதி, குரல்வளை ஆகியவற்றில் புற்றுநோய் தாக்குதல் அதிகம்.

சிறுவயது புற்றுநோய்

முதல்முறையாக, சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்தும் தனிக் கவனம் செலுத்தித் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்படும் நோயாளிகளில் குழந்தைகள் கணிசமாக இருக்கின்றனர். சிறுவர்களில் கிழக்குக் காசி குன்றுகள் (0.8%) குறைவாக உள்ள இடமாகவும் டெல்லி (5.8%) அதிகமாக உள்ள இடமாகவும் இருக்கின்றன. சிறுமிகளில் கிழக்கு காசி குன்றுகளில் குறைவாகவும் (0.5%) ஆமதாபாத் ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் (3.4%) புற்றுநோய் காணப்படுகிறது. பெரியவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பைக் கணக்கிடும்போது லட்சத்தில் இத்தனை பேருக்கு என்று கணக்கிடுவது வழக்கம். சிறுவர், சிறுமியருக்குப் பத்து லட்சத்தில் இத்தனை பேருக்கு என்றுதான் கணக்கிடுவது வழக்கம். குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை.
11 1890572g

Related posts

தெரிந்துகொள்வோமா? டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

nathan

கர்ப்பத்தின் மூன்று மாத காலத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான தொடர்பை வலிமைப்படுத்த சில டிப்ஸ்….

nathan

அடேங்கப்பா! அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் நட்ஸ் சாப்பிடலாமா கூடாதா?

nathan

உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்…!

nathan

பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு 3 வாரங்களுக்கு முன் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

குழந்தைகளைத் தாக்கும் முக்கியமான புற்றுநோய்கள்… மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

தலைவலியை உடனேயே தீர்க்கும் எளிய வீட்டு மருத்துவம்!இதை முயன்று பாருங்கள்

nathan

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

nathan