27 C
Chennai
Thursday, Nov 14, 2024
ght
உடல் பயிற்சி

இடுப்பு, தொடை பகுதி சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்

இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம்”

கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 உடற்பயிற்சிகளும் உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவும். உடல் பருமனைக் குறைக்கும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து ‘ஸ்லிம்’மாகும்.

ட்விஸ்டர் க்ரஞ்சஸ் (Twister crunches)
இரண்டு கால்களையும் அகட்டிய நிலையில் நிற்க வேண்டும். கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இப்போது, அப்படியே இடது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். பிறகு வலது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். இதுபோல் மாறி மாறி உடலைத் திருப்ப வேண்டும். கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.

அப்டாமினல் ஸ்ட்ரச் (Abdominal stretch)
தரையைப் பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன்னால் ஊன்றிக்கொள்ளவும். உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்தவும். மொத்த அழுத்தமும் கைகளில் இருக்கட்டும். இதே நிலையில் ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டுசெல்லவும். சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தலையையும் உடலையும் மேலே தூக்கி முன்னர் செய்தது போலவே செய்ய வேண்டும். எல்லா உடற்பயிற்சிகளும் செய்து முடித்ததும், இந்தப் பயிற்சியை கடைசியாகச் செய்யவும்.
ght

Related posts

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கான கண் பயிற்சிகள்

nathan

உயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்

nathan

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

உடல் எடையை குறைக்க சீரான உடற்பயிற்சி தேவை

nathan

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் மெல்லோட்டம் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் துணையுடன் சேர்ந்து உடல் எடையைக் குறைக்க சில செக்ஸியான வழிகள்!!!

nathan

கைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்

nathan

ரஷ்யன் ட்விஸ்ட் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

nathan

கண்களைக் காக்கும் யோகா !

nathan