27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அசைவ வகைகள்

மட்டன் மிளகு கறி

தேவையானவை:
ஆட்டு கறி- 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம்-15 (சிறிதாக நறுக்கியது)
பூண்டு-15 பல்(சிறிதாக நறுக்கியது)
இஞ்சி-1 துண்டு
பச்சை மிளகாய்-(நறுக்காமல்)
மிளகு தூள் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்-2 மேசைக்கரண்டி
தனியா(மல்லி) தூள்- 2 மேசைக்கரண்டி
சீரகத் தூள்- 2 தேக்கரண்டி
சோம்பு-1 மேசைக்கரண்டி
கறம் மசாலா தூள்- 2 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி
தேங்காய் அரைத்தது- 2 மேசைக்கரண்டி
மல்லி தழை- 1 பிடி
கறிவேப்பில்லை-1 கொத்து
உப்பு- தேவைக்கேற்ப
யெண்ணை- 3 மேசைக்கரண்டி

செய்முறை:
குக்கரில் சிறிது யெண்ணை ஊற்றி காய்ந்ததும் கழுவியக்கறியை அரை உப்பு, மஞ்சல்,சிறிது இஞ்சி துண்டு (தட்டி), சேர்த்து வதக்கவும், கறி மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி 5-7 விஸில் குக்கரில் வைக்கவும்.
வாணலியில் யெண்ணை ஊற்றி சூடாக்கவும், அதில் சோம்பு தாளித்து, இஞ்சி,பூண்டு விழுதை வாசம் போகும் வரை வத்க்கவும், பின்னர் நறுக்கிய வெங்கயத்தை சேர்த்து வதக்கவும், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், சேர்க்கவும், அடுப்பை சிறிய தீயில் வைத்து மிளகு தூள்,மஞ்சள் தூள், தனியா(மல்லி) தூள், மேசைக்கரண்டி, சீரகத் தூள், கறம் மசாலா தூள் எல்லாம் சேர்த்து கிண்டவும்
இதில் வேகவைத்த கறியை சேர்க்கவும், உப்பு, தேங்காய் சேர்த்து கொதிக்கவிடவும். யெண்ணை வெளியெ வ்ரும் போது அடுப்பிலிருந்து இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Related posts

சுவையான பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan

கோழி ரசம்

nathan

சுவையான மங்களூர் முட்டை குழம்பு

nathan

சுவையான கல்மி கபாப்

nathan

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

சண்டே ஸ்பெஷல்: ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன்

nathan

செட்டிநாடு மீன் குழம்பு (தேங்காய் சேர்க்காதது) !

nathan

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் – KFC Style Fried Chicken

nathan

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு

nathan