ser
சூப் வகைகள்

காலிஃபிளவர் சூப்

தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் – 1 1/2 கிண்ணம் நறுக்கியது
வெண்ணெய் – 5 கிராம்
வெங்காயம் – 1
காய்ச்சிய பால் – அரை கப்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
சோளமாவு – 11/2 டேபில் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காலிஃபிளவரை அரிந்து சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் பிரஷர் பானில் சிறிது வெண்ணெய்யைச் சூடாக்கி வெங்காயம், காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும்.
* நன்கு வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
* அத்துடன் ஒரு கப் பால், சிறிது உப்பு சேர்க்கவும்.
* பின்னர் அரை டம்ளர் தண்ணீரில் ஒன்றரை தேக்கரண்டி சோளமாவைக் கரைத்து ஊற்றவும். நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். அதில் தேவையான அளவு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
* சுவையான காலிஃபிளவர் சூப் ரெடி.
ser

Related posts

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

கேரட் தக்காளி சூப்

nathan

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan

சத்தான சுவையான பச்சை பயறு சூப்

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சூப்

nathan

ஜவ்வரிசி – சோள சூப் (சைனீஸ் ஸ்டைல்)

nathan

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

nathan

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan