big1
தொப்பை குறைய

கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்?

கொழுப்பில் இரண்டு வகை உண்டு. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. இதில், நல்ல கொழுப்பை எச்.டி.எல்., என்றும், தீய கொழுப்பை எல்.டி.எல்., என்றும், மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தை, நல்ல கொழுப்புகள் ஊக்குவிக்கின்றன. தீய கொழுப்புகள் ரத்தநாளங்களிலும், ரத்தத்திலும் சேருவது நல்லதல்ல. கெட்ட கொழுப்புகளை அகற்ற, மருந்துகளை விட, தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது, யோகாசன பயிற்கிகள் செய்வது உதவும்.

கெட்ட கொழுப்பை குறைக்க, சில எளிய உணவு வகைகளும் உள்ளன. இதில், வெண்ணெய் பழத்தை முக்கியமாக குறிப்பிடலாம். இப்பழத்தை உண்ணுவதால், உடலில் உள்ள தீய கொழுப்பு அகலுவதோடு, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இப்பழத்தில் உள்ள சத்து, ரத்தநாளங்கள் மற்றும் ரத்தத்தில் உள்ள தீய கொழுப்பை அகற்றும் பணியை மேற்கொள்கிறது. பாதாமில் உள்ள சத்துகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.

இதயத்தில் உள்ள ரத்த நாளங்கள், சேதமடையாமல் இருக்கவும் உதவுகிறது. எனவே, அதிகாலையில் பாதாம் உண்ணுவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. கடல் மீன்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மீன்களில் உள்ள, ஒமேகா என்ற சத்து, இதயத்துக்கு மிகவும் நல்லது.

அதே போல, நார்ச்சத்து மிக்க உணவுகளை உண்பது, நம் உடல் நலனுக்கு ஏற்றது. அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. பழங்கள், காய்கறிகள், தானியங்களில் நார்ச்சத்து அதிகளவு உள்ளது. தினமும் பழம், காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு, ஓட்ஸ் சிறந்த உணவு. இதை தினமும் உண்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை, கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
big1

Related posts

இதோ எளிய நிவாரணம்! 12 வாரம் நைட் தூங்கும் முன் இத 1 டேபிள் ஸ்பூன் குடிச்சா.. தொப்பை காணாம போகும் தெரியுமா?

nathan

வயிற்றுக் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்க முடியுமா?

nathan

தொப்பை உள்ளவர்கள் செய்யவேண்டிய அர்த்த கோமுகாசனம்

nathan

தொப்பையை குறைக்க நினைக்கும் பெண்களுக்கு…

nathan

அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய…..!

nathan

தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்

nathan

தொப்பை குறைய நைட் தூங்கும் போது இதை குடியுங்கள்

nathan

தொப்பையை மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க..

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பழத்தில் டீ போட்டு குடிங்க! கரையாத கொழுப்பும் வேகமாக கரையும்…

nathan