இன்றைய காலத்தில் பலருக்கும் கண்கள் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பலருக்கு கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து, முகமே அசிங்கமாக காணப்படும். இதற்கு முதன்மையான காரணம் தூக்கமின்மை தான்.
இதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக குடிப்பது, அலர்ஜி, மரபுசார் காரணங்கள், அளவுக்கு அதிகமாக தூங்குவது, இரத்த சோகை, மன அழுத்தம், மேக்கப் அதிகம் போடுவது போன்றவைகளும் காரணமாக உள்ளன. இவை அனைத்துமே தற்போதைய தலைமுறையினர் அதிகம் சந்திப்பவைகளே.
இந்த கருவளையங்களை மறைப்பதற்கு கண்ட க்ரீம்களை பெண்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இவற்றை எளிய பொருட்களைக் கொண்டே ஈஸியாக போக்கலாம். சரி, இப்போது கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!
டிப்ஸ் #1
பாதாம் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் போது 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், கண்கள் ஊட்டமளிக்கப்பட்டு, கருவளையங்கள் மறையும்.
டிப்ஸ் #2
உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரியுங்கள். அதற்கு தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து, அன்றைய தினத்தைத் தொடங்குங்கள்.
டிப்ஸ் #3
கிளின்சர் பயன்படுத்துவதாக இருந்தால், சருமத்திற்கு ஏற்ற மற்றும் மைல்டு கிளின்சரைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். ஏனெனில் கண்களைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் சென்சிடிவ்வானது.
டிப்ஸ் #4
தினமும் சரிவிகித உணவைக் கொண்டு வாருங்கள். குறிப்பாக வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் கண்களைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். இதனால் கருவளையங்கள் நிச்சயம் மறையும்.
டிப்ஸ் #6
தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், அது கருவளையங்களை கட்டாயம் நீக்கும். அதற்கு தக்காளி ஜூஸை, வெள்ளரிக்காய் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
டிப்ஸ் #7
சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, சன்ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்துவோம். அப்படி முகம் மற்றும் கண்களுக்கு அடியில் பயன்படுத்தும் போது, சற்று நீருடன் கலந்து பயன்படுத்துவதே நல்ல பலனைத் தரும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சாறு எடுத்து, வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ, கருவளையங்கள் மறையும்.
டிப்ஸ் #9
தினமும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இதனால் மனம் அமைதியாகி, நாளடைவில் கருவளையங்களும் மறையும்.
டிப்ஸ் #10
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும். ஆனால் எலுமிச்சை சாற்றினை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதனை நீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், கண்களைச் சுற்றியுள்ள சருமம் பாதிக்கப்படும்.