26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
Common mistakes while washing face SECVPF
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

உப்பு:சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.

அயோடின் சத்துக் குறைவால் “கழலை” எனப்படும் கழுத்தின் “முன்புற வீக்கம்”, “கழுத்துக்கழலை” நோய் ஏற்படுகிறது.

தவிடு:கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.

முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன.

முல்தானி மட்டி:இது ஒரு வகை மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும்.

இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.Common mistakes while washing face SECVPF

Related posts

இதை நீங்களே பாருங்க.! கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் லொஸ்லியா!

nathan

சப்போட்டா ஃபேஷியல்

nathan

க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களைப் போக்க

nathan

காபியை அதிகமாக குடித்தால் முகப்பரு உண்டாகிறது பெண்களே……

nathan

மிகவும் அழகான பகுதி கைகள் பராமரிப்பு…..

sangika

முகப் பொலிவிற்கு!

nathan

தினந்தோறும் மேக்கப் போட்டுக் கொண்ட பிறகு இதை செய்யுங்கள்!…

nathan

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan

கண்ணிமை அடர்த்தி பெற வீட்டிலேயே சுலபமாக மஸ்காரா தயாரிப்பது எப்படி?

nathan