27.3 C
Chennai
Thursday, Aug 14, 2025
30 1430396221 liver544 600
மருத்துவ குறிப்பு

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க மேற்கொள்ள வேண்டிய டயட்…

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு தான் கல்லீரல். கல்லீரல் தான் உடலில் உள்ள நச்சுக்களை பிரித்து உடலில் இருந்து வெளியேற்றும். கல்லீரலானது சரியாக செயல்படாமல், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறாமல் இருந்தால், பின் அதனால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

எனவே கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், கல்லீரலில் நோய்கள் வராமல் இருக்கவும், சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருசில பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும்.

இங்கு கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க மேற்கொள்ள வேண்டிய டயட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தவிர்க்க வேண்டியவையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட சாப்பிட வேண்டியவைகள்!!!

வெங்காயம் மற்றும் பூண்டு

இந்த உணவுப் பொருட்களில் சல்பர் அதிகம் உள்ளது. இவை கல்லீரல் நன்கு செயல்பட உதவி புரிவதோடு, கல்லீரலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள பெக்டின் என்னும் பொருள் கல்லீரலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்ற உதவும். மேலும் பீட்ரூட் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸிலும் சோடியம் அதிகம் உள்ளது. இதுவும் கல்லீரலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றவும், கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படவும் உதவும்.

கேரட்

கேரட்டில் உள்ள நியாசின் மற்றும் பீட்டா கரோட்டீன் கண்கள் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. முக்கியமாக இதில் உள்ள நியாசின், டாக்ஸின்கள் வெளியெற உதவுவதோடு, கல்லீரல் கெட்ட நச்சுக்களை உறிஞ்சாமல் தடுக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்களால் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும்.

செயற்கை சுவையூட்டிகள்

செயற்கை சுவையூட்டிகள் மற்றும் ஃபுருக்டோஸ் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்தால், கல்லீரலின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஆல்கஹால் பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

30 1430396221 liver544 600

Related posts

உண்மையான காதல் என்றால் என்னனு தெரியனுமா இதை படிங்க!!

nathan

தெரிஞ்சிக்கங்க…நோய்களை விரட்டியடிக்க நம் தமிழர்கள் பயன்படுத்த இந்த பொருளை பற்றி தெரியுமா?

nathan

உங்கள் நகங்களில் இப்படி தென்பட்டால் உயிருக்கே ஆபத்து!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டிலேயே பிரசவ வலியை தூண்டும் 10 வழிமுறைகள்!!!

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப கண்டிப்பா இத படிங்க…

nathan

அவசியம் படிக்க.. பிரசவத்திற்கு கிளம்பும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்

nathan

வயிற்று புழு, சொறி, சிரங்கை குணப்படுத்தும் குப்பைமேனி

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க!

nathan