27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
551e3da9 b8e3 4d2b a27d 6359bb474e4d S secvpf
அசைவ வகைகள்

செட்டிநாடு இறால் குழம்பு

தேவையான பொருட்கள்

இறால் – 400 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
அரைத்த பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 5
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், கசகசா சேர்த்து, 3 நிமிடம் வறுக்கவும்.

* அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காயை போட்டு நன்றாக வறுக்கவும்.

* வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சியில் போட்டு அதனுடன் ப.மிளகாயை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 4 நிமிடம் வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 5 நிமிடம் வதக்கிய பின்னர் அதில் அரைத்த தேங்காய் மசாலா கலவையை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி.
551e3da9 b8e3 4d2b a27d 6359bb474e4d S secvpf

Related posts

ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

ஸ்டைல் இறால் ப்ரை

nathan

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

nathan

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

மீன் வறுவல்

nathan

சுவையான சிக்கன் குருமா!…

sangika

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

சுவையான அவித்த முட்டை மிளகு பிரட்டல்

nathan