26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
621383c9 f3d2 4ff4 8bf7 b0cc6976fa3f S secvpf
பெண்கள் மருத்துவம்

பெண்மையை அதிகரிக்கச் செய்யும் கல்யாண முருங்கை

‘கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில், கல்யாண முருங்கை இருக்கவேண்டும்’ என்றொரு பழமொழி உண்டு. கல்யாண முருங்கையின் மகத்துவம் பற்றி சித்த மருத்துவம் பக்கம், பக்கமாக கூறுகிறது.

பெண்களுக்காக பிரத்யேகமாக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்று இதை சொல்கிறது. இந்த செடி இருக்கும் வீடுகளில் பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்ற ஐதீகமும் இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு பெண்மையை அளிப்பது ஹார்மோன்தான். இதை நாளமில்லா சுரப்பி என்கிறார்கள். இந்த சுரப்பில் ஏதேனும் கோளாறு இருந்தால் அதை நிவர்த்தி செய்யக்கூடிய தன்மை இந்த கல்யாண முருங்கை இலைக்கு உள்ளது.

இந்த இலையை அடையாக செய்து சாப்பிடலாம், தோசையாகவும் செய்யலாம். ‘சூப்’பாகவும் பருகலாம். இதனால் பெண்மைக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பெண்ணின் அழகும், கவர்ச்சியும் கூடும்.

இன்றைய பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள் அதிகம் இருக்கிறது. அவற்றை இந்த கல்யாண முருங்கை இலை அற்புதமாக குணப்படுத்துகிறது. கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி சரியாக இருக்க எண்டோமேர்டியம் என்ற சதை கர்ப்பப்பையின் உள்ளே வளருகிறது. இந்த சதை வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கரு அதனுடன் ஒட்டி குழந்தையாக உருவெடுக்கும்.

இன்று பெண்கள் துவர்ப்பான, நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதில்லை. துரித உணவு, மன அழுத்தம் போன்ற பலவற்றாலும் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய கருப்பை உட்புற சதை வளர்ச்சி ஏற்படுவதில்லை அதனால் கரு உருவாகாத நிலை, உருவான கருவும், சிதைவுறும் நிலை போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெண்மை தாய்மை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதற்கு கல்யாண முருங்கை மரத்தின் பட்டையை கொஞ்சம் எடுத்து லேசாக இடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, பாதி நீராக சுண்டச் செய்தபின் அதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பையின் உட்புறச் சதை வளர்ச்சி மேம்படும். கருவும் உருவாகும்.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் வயிற்று வலி, உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய இதன் இலை நல்ல மருந்து. வலி பறந்து போகும். இன்றைய பெண்கள் எந்த வலிக்கும், வலி மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். அது கர்ப்பப்பையை தளர்த்தி, சினைப்பையையும் தளர்த்திவிடும். இதனால் வீரியமிக்க கருமுட்டை உருவாகாமல் போகும். மலட்டுத்தன்மை ஏற்படும்.

இதையெல்லாம் உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் கல்யாண முருங்கையை போற்றி வளர்த்து வந்தனர். இது முழுக்க முழுக்க பெண்மையை மெருகேற்றி, தாய்மையை உருவாக்கவே வளர்க்கப்பட்டிருக்கிறது.
621383c9 f3d2 4ff4 8bf7 b0cc6976fa3f S secvpf

Related posts

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான 5 காரணங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவ காலத்தில் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும் முறைகள்

nathan

கருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும்

nathan

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது நிறுத்தலாம்?

nathan

40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…!

nathan

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது ? இதை தடுக்க சில வழிகள் !!

nathan

இன்றே மேற்கொள்ளுங்கள்.!! குழந்தையின்மை பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

nathan

எந்தெந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

nathan

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

sangika