கோடைக்காலம் ஆரம்பமாக போகிற நிலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதோடு, அளவுக்கு அதிகமாக வியர்வையும் வெளியேறுகிறது. வியர்வை அதிகம் வெளிவருவதால் உடலில் துர்நாற்றமும் அதிகம் வீசுகிறது.
இதன் காரணமாக நம் அருகில் வருவோர் அசௌகரியத்தை உணர்வதோடு, நம் அருகில் வரவே தயங்குகிறார்கள். அதிலும் பேருந்தில் செல்லும் போது என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையைத் தவிர்க்க பலரும் டியோடரண்ட்டுகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஆனால் அப்படி கெமிக்கல் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒருசில நேச்சுரல் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்தினால் சரும அழற்சி ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த நேச்சுரல் டியோடரண்ட்டுகள் என்னவென்று பார்ப்போம்.
டீ-ட்ரீ ஆயில்
2 துளி டீ-ட்ரீ ஆயிலை 2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, பஞ்சில் நனைத்து உடை உடுத்தும் முன் அக்குளில் தினமும் தடவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், அப்பகுதியில் துர்நாற்றத்தை வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வியர்வை நாற்றத்தைத் தடுக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் நனைத்து அக்குளில் தடவ வேண்டும். இதனார் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, பாக்டீரியாக்களை அழிப்பதோடு, சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தும். மேலும் அதிகளவில் வியர்வை உற்பத்தி செய்யப்படுவதும் கட்டுப்படுத்தப்படும்.
நறுமண எண்ணெய்கள்
லாவெண்டர் மற்றும் புதினா எண்ணெய்களை ஒன்றாக கலந்து, அவற்றை தினமும் அக்குளில் தடவி வர, அக்குளில் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நாள் முழுவதும் நல்ல நறுமணத்துடன் இருக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் அக்குளில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வியர்வை துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.
விட்ச் ஹாசில்
இந்த மூலிகை ஓர் சிறந்த கிளின்சர் தன்மை கொண்டது. இது உடலின் pH அளவை குறைத்து, பாக்டீரியாக்கள் வாழ்வதற்கான சூழ்நிலையைத் தடுத்து, வியர்வையினால் உடல் துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையை ஒன்றாக கலந்து அக்குளில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் அக்குளில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, எலுமிச்சை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும்.
சோள மாவு
சோள மாவை அக்குளில் சிறிது பூசினால், அது அக்குளில் உள்ள ஈரப்பதம் முழுவதையும் உறிஞ்சி, துர்நாற்றத்தை வீசும் பாக்டீரியாக்களையும் அழிக்கும்.