முருங்கை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. எண்ணற்ற பயன்களை கொண்ட முருங்கையின் மகத்துவத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். முருகன் கை காய் என்பதே முருங்கைகாய் என்று முன்னோர்கள் அழைத்தார்கள். முருகனுக்கு உகந்த கிருத்திகை போன்ற விஷேச நாட்களில் முருங்கை கீரையை வைத்து முருகப் பெருமானை வழிபாடு செய்வர்.
உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துக்கள் முருங்கையில் உள்ளன. முருங்கை பூ, கீரை, பட்டை, காம்பு, பிஞ்சு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. பல்வேறு சிறப்புகளை கொண்ட முருங்கை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடியது. முருங்கை பிஞ்சை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் அரை ஸ்பூன் நெய் விட்டு வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சிறிதளவு மிளகு பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
இதை சாப்பிட்டு வந்தால் தூக்கத்தில் விந்து வெளியாகுதல், சிறுநீர் கழிக்கும்போது விந்து வெளியாவது தவிர்க்கப்படும். விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை மாறும்.முருங்கை பிசினை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் ஊரவைத்து காலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. முருங்கை கீரையில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது. முருங்கை கீரை சாப்பிட்டால் ரத்தசோகை சரியாகும்.
முருங்கை பட்டையில் இருந்து சாறு எடுத்து, அவற்றுடன் எலுமிச்சை சாறு, தேன் சேர்க்க வேண்டும். பின்னர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இது சளியை கரைக்கும் தன்மை கொண்டது. இருமலை தடுக்க கூடியது. சுவாச பாதை வீக்கத்தை வற்ற வைக்கும். ஆஸ்துமாவுக்கு நல்லது.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது முருங்கை. எலும்புக்கு வலு சேர்க்க கூடியது. முருங்கை கீரை உடலுக்கு பலத்தை கொடுக்க கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை கொண்டவை. நார்சத்துமிக்க இந்த முருங்கையால் மலச்சிக்கல் தீரும். முருங்கை பிசின் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புத்துணர்வை கொடுக்க கூடியது. புற்றுநோயை தடுக்கும் தன்மை கொண்டது.