26.1 C
Chennai
Sunday, Aug 17, 2025
19 1432036676 6 drink this before going to bed
தொப்பை குறைய

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…!

பானை போன்று வயிறு வீக்கி உள்ளதா? அதைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் தினமும் உடற்பயிற்சி செய்து வருதோடு, இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால், தொப்பை விரைவில் குறையுமாம்.

அதிலும் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்துவிட்டு இரவில் தூங்கினால், சீக்கிரம் தொப்பை குறைவதைக் காணலாம். ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.

சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த பானத்தையும், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மருத்துவ குணங்களையும் காணலாம்.

வெள்ளரிக்காய்

தொப்பையைக் குறைக்க வேண்டுமெனில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதிலும் ஒரு முழு வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதில் எவ்வித பிரச்சனையும் நேராது.

கொத்தமல்லி

கொத்தமல்லியில் கலோரிகள் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றிவிடும்.

இஞ்சி

இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, கொழுப்புக்களை கரையும். எனவே உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள பொருள், கொழுப்புக்களை விரைவில் கரைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ஆற்றலை அதிகரித்து, தேங்கியுள்ள கொழுப்புக்களை கரையச் செய்யும்.

ஜூஸ் செய்முறை

வெள்ளரிக்காய் – 1 கொத்தமல்லி – 1 கட்டு எலுமிச்சை – 1 துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/2 டம்ளர் மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், தொப்பை குறைவதை நன்கு காணலாம்.19 1432036676 6 drink this before going to bed

Related posts

தொப்பை குறைய பயிற்சி

nathan

தொப்பையை கரைக்க உதவும் ஜூஸ்

nathan

இரண்டே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

தட்டையான வயிற்றை ஏழே நாட்களில் பெற இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிங்க..

nathan

ஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்?

nathan

இதயத் துடிப்பை சீராக்கும் புஷ் அப் வித் ரொட்டேஷன் பயிற்சி

nathan

அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்கும் 10 அற்புதமான மூலிகைகள்!!

nathan