23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld3577
சரும பராமரிப்பு

பவுடர்

குளித்ததும் போட்டுக் கொள்கிற பவுடர் குளுகுளு உணர்வு தரும் பவுடர் முகத்துக்கான பவுடர் மேக்கப்புக்கான பவுடர் இப்படி பவுடரின் பல வகைகள் பற்றியும் அவற்றின் உபயோகங்கள் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். மீதமிருக்கிற சில வகைகளைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு பற்றியும் தொடர்கிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

காம்பேக்ட் பவுடர்

காம்பேக்ட் பவுடர் என்பதும் ப்ரஸ்டு பவுடர்தான். டிரான்ஸ்லூசன்ட் பவுடர், டிரான்ஸ்பரன்ட் பவுடர் என்றெல்லாம் பார்த்தோம் இல்லையா? அதையே மேலும் மேலும் வைத்து அழுத்தி, கம்ப்ரெஸ் செய்து, ஒரு சின்ன டப்பாவில் வருவதே காம்பேக்ட் பவுடர். இதை ப்ரஸ்டு பவுடர் அல்லது காம்பேக்ட் பவுடர் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இதில் நிறைய கலர்கள் வருகின்றன. காம்பேக்ட்டிலேயே ஒன்லி பவுடர் என வருகிறது. பவுடரும் கூட ஒரு பஃப்பும் வரும்.

காம்பேக்டிலேயே டூ இன் ஒன் என டூயல் ஃபினிஷ் பவுடரும் வருகிறது. அதில் ஒரு சின்ன ஸ்பாஞ்ச் இருக்கும். கீழே காற்றோட்டத்துக்காக துளைகள் இருக்கும். அந்த ஸ்பாஞ்சை ஈரமில்லாமல் உபயோகித்தால் பவுடர் மாதிரி வரும். அந்த ஸ்பாஞ்சையே ஈரமாக்கி, தொட்டு முகத்தில் தடவினால் பளிச்சென மேக்கப் போட்டது போல இருக்கும். விசேஷங்களுக்கு உபயோகிக்க ஏற்றது. சிலர் ஒரு ஈர ஸ்பாஞ்சை வைத்து முதலில் முகத்தில் தடவி விடுவார்கள்.

அது முகத்தை பளீரென மாற்றிவிடும். அதற்கு மேல் ஈரமில்லாத ஸ்பாஞ்சை வைத்து அதே பவுடரை தொட்டு தடவுவார்கள். அப்படியும் உபயோகிக்கலாம். இதில் நிறைய ஷேடுகள் உள்ளன. ரொம்பவும் சிவந்த நிறம் கொண்டவர்கள் முதல் ரொம்பவும் கருப்பான சருமம் கொண்டவர்கள் வரை எல்லோருக்கும் ஷேடுகள் உள்ளன. பிராண்டுக்கேற்ப பெயர்கள் அல்லது எண்கள் மாறலாம். பொதுவாக வெரி ஃபேர், ஃபேர், ஐவரி, பேஜ் எனப் பார்த்து வாங்கலாம்.

பேபி பவுடர்

டால்கம் என்பது பெரியவர்கள் உபயோகிப்பது. டால்க்கை நன்கு சலித்து, மிக மென்மையான பவுடராக எடுக்கும் போது அது டால்கம் ஆகும். பேபி பவுடர் என்பது இன்னும்கூட மிருதுவாக இருக்கும். குழந்தைகளின் சருமம் ரொம்பவே மிருதுவாக இருப்பதால் அதைக் கொஞ்சம்கூட பாதிக்காத வகையில் மென்மையான பவுடரைதான் உபயோகிக்க வேண்டும். பெரும்பாலும் பேபி பவுடர்கள் வாசனையோ, கலரோ அதிகமில்லாதபடி, குழந்தையின் சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தாதபடி இருக்கும்.

குழந்தையைக் குளிப்பாட்டி, துடைத்ததும் போட்டுவிடலாம். டயாப்பர் அணிந்திருக்கிற இடங்களில், தோல் மடிப்புகளில் போடலாம். குழந்தைக்கு பவுடர் போடலாம் என்று ஒரு பிரிவும், போடக்கூடாது என்று இன்னொரு பிரிவும் சொல்வதைக் கேட்கிறோம். அளவோடு உபயோகிக்கிற வரை பிரச்னை இல்லை. எப்போதும் பவுடரை போட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். பெரியவர்களுக்கு உபயோகிக்கிற பவுடரில் வாசனை அதிகமிருக்கும் என்பதால் அதைத் தவிர்க்கவும். தரமான நிறுவனம் தயாரிக்கிற பேபி பவுடரை மட்டுமே குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும்.

மெடிக்கேட்டட் பவுடர்

ஆன்ட்டி ஃபங்கல் பவுடர் என்பது இப்போது ரொம்பவே பிரபலமாக இருக்கிறது. குளித்து விட்டு வந்ததும் சரும மடிப்புகளின் இடையில் பூஞ்சைத் தொற்று இருந்தால் இந்த பவுடரை உபயோகிக்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். சருமத்தில் எந்தவிதமான ரேஷஸும் வராமலிருக்கவும் இது உதவும். சிலருக்கு வியர்வை அதிகமிருக்கலாம். குண்டாக இருப்பதால் மடிப்புகள் அதிகமிருக்கலாம். இவர்களுக்கெல்லாம் அந்தப் பகுதிகள் ஈரமின்றி இருந்தால்தான் உராயாமல் இருக்கும். ரேஷஸ் வராமலிருக்கும். சிலருக்கு தண்ணீர் மூலம் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன் வந்து தேமல் மாதிரியான சரும பாதிப்புகள் வரும். அதற்கும் ஆன்ட்டி ஃபங்கல் பவுடர் உபயோகிக்கலாம்.

ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் என 2 உண்டு. சிலது ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் என இரண்டும் கலந்ததாகவும் இருக்கும். சிலருக்கு சாதாரண அரிப்பாக இருக்கும். அவர்கள் ஆன்ட்டி பாக்டீரியல் பவுடர் உபயோகிக்கலாம். பூஞ்சை பிரச்னை இருப்பவர்கள் இந்த இரண்டும் கலந்த பவுடரை கூட உபயோகிக்கலாம்.

இன்னொரு வகை ஆன்ட்டிபயாடிக் பவுடர். அடிபட்ட காயங்களுக்குப் போட மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள். ஏதேனும் வெட்டுக்காயமோ, புண்களோ இருந்தால் இந்தப் பவுடர் போடலாம்.பவுடர் எதனால் செய்யப்படுகிறது என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். கால்சியம் கார்பனேட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதில் நைலான் பொருட்கள் கலக்கப்படுவதால் மென்மையான வழவழப்பான பவுடர் நமக்குக் கிடைக்கிறது. ப்ரஸ்டு பவுடர்களில் ஸிங்க் ஆக்சைடு கலக்கிறார்கள்.

மைக்ரோனை சேஷன் முறையின் மூலம் பெரிய துகள்களாக உள்ள பவுடரை மிக மிக நுண்ணிய, மிருதுவான பவுடராக மாற்ற முடிகிறது. பிறகு அதில் கலர் அல்லது பைண்டர் கலந்து லூஸ் பவுடராகவோ, ப்ரஸ்டு பவுடராகவோ மாற்றுகிறார்கள். எல்லா ப்ரஸ்டு பவுடர்களிலும் டைட்டேனியம் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. அதை உபயோகிப்பதன் மூலம் சருமத்துக்கு சீரான ஒரு தோற்றம் கிடைக்கும்.

வாக்சிங் செய்யும் போதும் பவுடர் பயன்படும். முடிகளை நீக்க வேண்டிய சருமப் பகுதியில் முதலில் பவுடரை போட்டு பிறகு வாக்ஸ் செய்யும் போது அது சுலபமாக இருக்கும். அதே போல ஐ ப்ரோ திரெடிங் செய்யும் போதும் பவுடர் தடவிதான் செய்வோம். அந்தப் பகுதி கொஞ்சம் வறண்டிருந்தால்தான் முடியை நீக்க முடியும். வியர்வை இருக்காது. வலியும் குறையும். பெடிக்யூர் பண்ணும்போது டஸ்ட்டிங் பவுடர் என ஒன்று உபயோகிப்போம். கால்களில் வியர்வை இருக்காது. ஷூ, சாக்ஸ் போடுவோருக்கு கால்களில் ஒருவித வாடை வராமலிருக்க, இந்தப் பவுடரை பயன்படுத்தலாம்.ld3577

Related posts

இந்த வயதிலும் எப்படி…. என கேட்கும் பெண்களுக்காக ஜொலிக்கும் நயன்தாரா!… யூட்டி டிப்ஸ்கள் இதோ..

nathan

எல்லாவிதமான சரும பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அருமையான அழகுக் குறிப்புகள்!!

nathan

சருமம் பளபளக்க வேண்டுமா?

nathan

இவைகள் இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இதோ சில அற்புத வழிகள்!

nathan

சோடா உப்பு சருமத்திற்கு செய்யும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?

nathan

பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan