27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
11 alookalimirch
சைவம்

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

தேவையானவை:
உருளைக்-கிழங்கு – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, வரமிளகாய் – 10, சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

உருளைக்-கிழங்கை குண்டு, குண்டாக நறுக்கிக்-கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள். வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு வெடித்ததும் வரமிளகாய் போட்டு கருகாமல் வறுக்கவும். பிறகு, வெங்காயம், உருளைக்கிழங்கு போட்டு நன்றாகக் கிளறி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்புப் போட்டு நன்றாகக் கொதிக்கும்போது மூடி, தீயைக் குறைத்துவிடுங்கள். கிழங்கு நன்றாக வெந்தபிறகு, தீயை அதிகரித்து, தண்ணீர் வற்றியதும், சுருளக் கிளறி தீயைக் குறையுங்கள். மேலும் சிவக்க சிவக்க கிளறி இறக்குங்கள். வரமிளகாயுடன் சேர்ந்து வெந்தால்தான் கிழங்கில் உப்பு, காரம் நன்றாக ஊறி இறங்கும். தயிர்சாதத்துக்கு வெகு பொருத்தம் இந்த வறுவல்.11 alookalimirch

Related posts

ஸ்நாக்ஸ் சோயா 65

nathan

சிம்பிளான தக்காளி சாதம் செய்முறை விளக்கம்

nathan

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

காரசாரமான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி

nathan

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

nathan

சுவை மிகுந்த பாலக் பன்னீர் கிரேவி…

nathan

சூப்பரான பாகற்காய் ப்ரை

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan

உருளைகிழங்கு ரய்தா

nathan