மனிதனாக பிறந்தால், இன்பம், துன்பம் வருவது இயல்பு. ஆனால், துன்பத்தையே மனதில் நினைத்து, டென்ஷனிலேயே வாழ்பவர்கள் உண்டு. இப்படி இருந்தால், அகத்தின் அழகு முகத்தில் காண்பிப்பது போல், முகம் எப்போதும் “டல்’ ஆகதான் இருக்கும்.
சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல, ப்ரெஷாக இருப்பார்கள். இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த முகத்துடன் இருப்பார்கள். இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும், “மிஸ்’ ஆகி இருப்பதோடு அவர்களின் அழகும் காணாமல் போய் விடுகிறது.
இன்று பெரும்பாலானவர்கள் பம்பரத்தை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும், அலுவலக டென்ஷன், குடும்ப பிரச்னை, என பலவற்றில் சிக்கி தவிக்கின்றனர். டென்ஷன் ஆகாமல் எதையும் ‘டேக் இட் ஈசி’ யாக எடுத்துக்கொள்பவர்கள் ப்ரெஷ் ஆகவும் அழகாகவும் இருப்பர். எனவே, அழகுக்கும் மனதுக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது.
இந்த மனதை டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால், முகமும் அழகாக இருக்கும். எந்த ஒரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், உடனுக்குடன் அதற்கான முடிவை தேடி, தீர்வு காண முயற்சிக்கும் போது, மனம் திருப்தி அடைகிறது.
அப்போது, மனதினுள் புத்துணர்வு எழும். இப்புத்துணர்வு மனதை மட்டும் இல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.