22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
b2eb5ca3 00ad 4ff5 bca9 df7cf6f14eb0 S secvpf
சைவம்

முட்டைகோஸ் சாதம்

தேவையான பொருட்கள்:

துருவிய முட்டைகோஸ் – ஒரு கப்,
வடித்த சாதம் – ஒரு கப்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்),
மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

* வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… பட்டை, மிளகு – சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

* இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும்.

* இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

* சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம் ரெடி.

b2eb5ca3 00ad 4ff5 bca9 df7cf6f14eb0 S secvpf

Related posts

காளான் லாலிபாப்

nathan

உருளைக்கிழங்கு ரெய்தா

nathan

மிளகு மோர்க்குழம்பு

nathan

கலவை காய்கறி அவியல் செய்வது எப்படி?

nathan

மணக்கும் ஓமம் சாதம்

nathan

சுவையான பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan

மேங்கோ கர்டு ரைஸ்

nathan

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

nathan

அப்பளக் குழம்பு

nathan