அசைவ வகைகள்

சுவையான ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன்

green chilli chicken

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு…

* சிக்கன் – 250 கிராம்

* தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

பச்சை மசாலாவிற்கு…

* கொத்தமல்லி – 1/2 கப்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

தாளிப்பதற்கு…

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3

* கறிவேப்பிலை – சிறிது

* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

green chilli chicken

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனில் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* அதே சமயம் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு, சிறிது சீரகத்தையும் போட்டு நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் சோயா சாஸ் மற்றும் அரைத்த பச்சை மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு தூவி, சிக்கனை நன்கு வேக வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும், அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி தயார்.

Related posts

செட்டிநாட்டு வஞ்சிர மீன் குழம்பு

nathan

சில்லி சிக்கன்

nathan

மதுரை அயிரை மீன் குழம்பு

nathan

சுறா மீன் புட்டு

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி ??

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை

nathan

சோயா இறைச்சி பொரியல்

nathan

வஞ்சரம் மீன் ப்ரை – சன்டே ஸ்பெஷல்!

nathan