சமீபத்தில் நடிகர் ரஞ்சித் பகலக்ஷ்மி சீரியலில் நுழைந்தார். இனிமேல் இந்த தொடரின் முக்கிய கேரக்டர் என கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டதால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சீரியலில் கோபிக்கு அதிகக் காட்சிகள் இல்லை என்று அவரே சொன்னார்.
இந்நிலையில், இனி பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காதா, இனி அவர் சீரியலில் இருப்பாரா மாட்டாரா என்பது குறித்து அதே சீரியலில் கோபியின் தந்தையாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரோசரி பேசியுள்ளார்.
இனி கோபி இல்லையா
அவர் கூறியதில் ‘அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. கோபிக்கான காட்சிகள் வந்துகொண்டே தான் இருக்கும். அவர் ஒரு சிறந்த நடிகர். ரஞ்சித்தின் காட்சிகள் ஒரு ட்ராக் என்றால் கோபியின் காட்சிகள் ஒரு ட்ராக் கண்டிப்பாக வரும்’.