matar paneer 1645531153
சமையல் குறிப்புகள்

சுவையான மட்டர் பன்னீர்

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* பட்டாணி/மட்டர் – 1 கப்

* பிரஷ் க்ரீம் – 2-3 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 4 (நறுக்கியது)

* கிராம்பு – 1

* முந்திரி – 10

* ஏலக்காய் – 1

* பட்டை – 1 இன்ச்

* மிளகு – 10

matar paneer 1645531153

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, முந்திரி, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு ஆகியவற்றைப் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 1/2 கப் நீரை ஊற்றி பச்சை வாசனை போக 10-12 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் பச்சை பட்டாணி மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

* பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் பிரஷ் க்ரீம், கரம் மசாலா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மட்டர் பன்னீர் தயார்.

Related posts

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan

குடைமிளகாய் கறி

nathan

சமையல் குறிப்புகள்! சமையலில் கலக்க…

nathan

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம்…

sangika

சுவையான சப்பாத்தி நூடுல்ஸ்

nathan

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

இறால் புளிக்குழம்பு செய்யலாம்

nathan

சன்னா பட்டர் மசாலா

nathan