26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அறுசுவைசைவம்

காளான் dry fry

index2தேவையானவை:

பட்டன் காளான்-200 கிராம்
பெல்லாரி-2
பச்சை மிளகாய்-3
மிளகாய் பொடி-1 தேக்கரண்டி
மல்லி பொடி-1 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
கசகசா -1/2 தேக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
பட்டை-சிறு துண்டு
கிராம்பு-2
இஞ்சி-1 இன்ச்
பூண்டு-10
தயிர்-1தேக்கரண்டி
எண்ணெய்-4   தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
மல்லி தழை-கொஞ்சம்

செய்முறை:

காளானைத்  துடைத்து, பின் கழுவி நான்காக நறுக்கவும்.  பெல்லாரியை மெலிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.  இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். சீரகம், சோம்பு, கசகசா, பட்டை,கிராம்பை சேர்த்து நன்கு அரைக்கவும்.

பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தை லேசாக வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய காளான், அரைத்த விழுது, வதக்கிய வெங்காயம், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, தயிர் +உப்பு போட்டு 2 தேக்கரண்டி நீர் ஊற்றிப் பிசையவும்.

பின்னர் இதனை குளிர்பதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். குளிர் பெட்டி இல்லையென்றால், வெளியிலேயும் ஒரு மணி நேரம் வைக்கலாம்.

பிறகு,அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,  மசால் போட்ட காளானை போடவும். தீயைக் குறைத்து குறைவாக எரியவிடவும்.காளானில் நீர் வற்றி, சிவப்பு நிறம் வரும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். நன்றாக சிவந்து வறுபட்டதும், இறக்கி, கறிவேப்பிலை, மல்லி தழை  தூவி பரிமாறவும்.

இந்த காளான் அட்டகாசமாய் இருக்கும், இதனை சப்பாத்தி, பூரி,சாம்பார் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புலவு, மட்டன் குழம்பு,தயிர் சாதம் எதனுடனும் தொட்டு சாப்பிடலாம். செய்து பார்த்து, சுவைத்தபின் சொல்லுங்களேன்..!

Related posts

புதினா குழம்பு

nathan

வெஜிடபிள் பிரியாணி

nathan

ருசியான முட்டை சப்பாத்தி எப்படி செய்வது?…

sangika

கடலை புளிக்குழம்பு

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

கோதுமை ரவை புளியோதரை

nathan

மீல்மேக்கர் சோயா குழம்பு

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

பருப்பு சாதம்

nathan