தேவையானவை:
மைதா மாவு – 2 கப்
உலர் ஈஸ்ட் – 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோரில் “ட்ரை ஈஸ்ட்” என்று கேட்டால், அது பாக்கெட்டுகளில் கிடைக்கும்)
வெண்ணெய் – 5 தேக்கரண்டி
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தயிர் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 2/3 கப்
செய்முறை
* முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கி, பிறகு ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
* மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர் மற்றும் பாதி வெண்ணெய் கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
* பிசைந்த மாவை 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனால் மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று சற்று மொத்தமாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை வைக்க வேண்டும்.
* நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
* இப்போது சுவையான பட்டர் நாண் ரெடி!!!